கேரளத்தில் அமைச்சராக பொறுப்பேற்கவுள்ள ஓ.ஆர்.கேலு (கோப்பு படம்)
இந்தியா

கேரளத்தின் புதிய அமைச்சர்!

கே. ராதாகிருஷ்ணனுக்கு பதிலாக புதிய அமைச்சராக ஓ.ஆர்.கேலு தேர்வு.

DIN

கேரளத்தில் புதிய அமைச்சராக மானந்தவாடி எம்எல்ஏ ஓ.ஆர்.கேலு பதவியேற்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆலத்தூர் தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டியலின மற்றும் பழங்குடியினர், தேவஸ்வம் போர்டு அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்த கே. ராதாகிருஷ்ணனுக்கு பதிலாக வயநாட்டில் உள்ள பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த 54 வயதான ஓ.ஆர்.கேலு பதவியேற்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பினராயி விஜயன் தலைமையிலான இடது சாரி முன்னணி அமைச்சரவையில் ஓ.ஆர்.கேலுவை அமைச்சராக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு பரிந்துரை செய்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் நடைபெறும் ஓ.ஆர்.கேலுவின் பதவியேற்பு விழாவிற்கு ஆளுநர் ஆரிப் முகமது கானிடம், முதல்வர் அலுவலகம் கோரியுள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்தன.

கேலுவுக்கு பட்டியலின மற்றும் பழங்குடியினர் (எஸ்சி/எஸ்டி) இலாகா கிடைக்கும் என்பது தெளிவாகத் தெரிந்தாலும், ராதாகிருஷ்ணன் வகித்து வரும் சில இலாகாக்களில் சிறு குளறுபடிகள் இருக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து ஓ.ஆர்.கேலு கூறுகையில், “நான் எஸ்சி, எஸ்டி சமூகத்தினருடன் நெருக்கமாகப் பணியாற்றி வருகிறேன். அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளைப் புரிந்துகொள்கிறேன். எனவே, இந்த சமூகங்களுக்கான கட்சியின் திட்டங்களை முன்னெடுத்துச் செல்வதே எனது முயற்சியாக இருக்கும். வயநாட்டைச் சேர்ந்தவர் என்ற முறையில், மாவட்டத்தில் நிலவும் நாள்பட்ட பிரச்னையான மனித-விலங்கு மோதல் போன்ற பிரச்னைகளுக்கு சிறப்பு கவனம் செலுத்தப்படும்” என்றார்.

குறிச்சிய சமூகத்தில் பிறந்த கேலு, அடித்தட்டு மக்களுடன் வலுவான தொடர்புடன் வளர்ந்தார். மேலும், மானந்தவாடி தொகுதியில் இருந்து இரண்டு முறை எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேட்டூர் அணை நீர்மட்டம் உயர்வு!

மின்னல் தாக்கி சிகிச்சையிலிருந்த சிறுவன் பலி!

ஓசூர் அருகே அடுத்தடுத்து வாகனங்கள் மோதி விபத்து: 4 பேர் பலி

சொல்லப் போனால்... மருந்தெனப்படுவது விஷமானால்...

கனடா வெளியுறவு அமைச்சா் இன்று இந்தியா வருகை: மத்திய அமைச்சா்களுடன் பேச்சு!

SCROLL FOR NEXT