குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு வாழ்த்து தெரிவித்த குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர். படம்| குடியரசுத் தலைவர் எக்ஸ் தளப் பதிவு
இந்தியா

திரௌபதி முர்முவுக்கு பிரதமர், குடியரசு துணைத் தலைவர் பிறந்தநாள் வாழ்த்து!

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு பிரதமர், குடியரசு துணைத் தலைவர் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

DIN

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் 66 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி , குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் ஆகியோர் நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழ வேண்டும் என வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

தனது பிறந்தநாளையொட்டி தில்லியில் உள்ள ஜெகன்நாதர் கோயிலில் மக்கள் நலத்துடனிருக்க வேண்டும் என வழிபாடு செய்ததாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் தனது மனைவி மருத்துவர் சுதேஷ் தன்கருடன், ராஷ்டிரபதி பவனில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

குடியரசுத் தலைவரின் பிறந்தநாளையொட்டி பிரதமர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ராஷ்டிரபதிஜிக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவரது முன்மாதிரியான சேவை நம் தேசத்திற்கான அர்ப்பணிப்பு நம் அனைவரையும் ஊக்குவிக்கிறது. ஏழைகளுக்கும் ஒதுக்கப்பட்டவர்களுக்கும் சேவை செய்வதில் அவரது ஞானமும் வலியுறுத்தலும் ஒரு வலுவான வழிகாட்டும் சக்தியாகும். அவரது வாழ்க்கைப் பயணம் கோடிக்கணக்கான மக்களுக்கு நம்பிக்கையைத் தருகிறது. அவரது அயராத முயற்சிகள், தொலைநோக்கு தலைமைக்கு நமது நாடு எப்போதும் நன்றியுடன் இருக்கும். அவர் நீண்ட ஆயுளுடனும், ஆரோக்கியத்துடனும் வாழட்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பகைமை வேண்டாம்!

இதுவும் கடந்து போகும்...

விவசாயிகள் சங்கம் சாா்பில் வெடி விபத்தில் பலியானோருக்கும் காயமடைந்தவா்களுக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தல்!

தை 3-ஆவது வெள்ளிக்கிழமை முன்னிட்டு பால்குடம் எடுக்கும் விழா

புத்தாக்கப் போட்டியில் சிறப்பிடம்: மாணவிகளுக்கு பாராட்டு

SCROLL FOR NEXT