அருணாச்சலம், மிசோரம் மாநில நாளை முன்னிட்டு முர்மு வாழ்த்து!
அருணாச்சலப் பிரதேசம், மிசோரம் மாநில நாளை முன்னிட்டு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தனது நல்வாழ்த்துகள் குறித்து...
அருணாச்சலப் பிரதேசம், மிசோரம் மாநில நாளை முன்னிட்டு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தனது நல்வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
அருணாச்சலப் பிரதேசம் மற்றும் மிசோரம் ஆகிய இரு மாநிலங்களின் மாநில நாளை முன்னிட்டு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், "அருணாச்சலப் பிரதேசம், மிசோரமுக்கு மாநில நாள் நல்வாழ்த்துகள்!
Advertisement
Advertisement
இரு மாநிலங்களும் இயற்கை அழகுகளால் அனைவரையும் கவர்ந்து வரும் அழகான மாநிலங்கள், வளமான கலாச்சார பாரம்பரியம் மற்றும் தொழில்முனைவோர்களால் ஆசீர்வதிக்கப்பட்ட மாநிலங்கள்.
இரு மாநிலங்களும் தங்கள் குறிப்பிடத்தக்க பங்களிப்புகள் மற்றும் தேசிய வளர்ச்சிக்கான அர்ப்பணிப்புடன் தொடர்ந்து ஊக்கமளிப்பதாக கூறினார்.
மேலும், இரு மாநில மக்களும் நிலையான முன்னேற்றம் மற்றும் தொடர்ந்து செழித்து வளர்ச்சிப் பாதையில் முன்னேற்றம் அடைய வேண்டும் என அவர் மேலும் கூறியுள்ளார்.