ஹிமாசலில் பேருந்து விபத்து 
இந்தியா

ஹிமாசலில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 4 பேர் பலி!

ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த காரணத்தால் பேருந்து விபத்துக்குள்ளானதாக தகவல்...

DIN

ஹிமாசலப் பிரசேத்தின் சிம்லாவில் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் நான்கு பேர் உயிரிழந்தனர்.

சிம்லாவில் உள்ள ஜூப்பால் என்ற இடத்தில் கெஞ்சி பகுதியில் மலைப்பகுதியில் பேருந்து சென்றுகொண்டிருந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஓட்டுநர், நடத்துநர் உள்ளிட்ட 4 பேர் உயிரிழந்தனர்.

இந்த விபத்து இன்று காலை 6.45 மணிக்கு நிகழ்ந்தது. விபத்து ஏற்படும்போது 5 பயணிகள், ஓட்டுநர், நடத்துநர் உள்பட 7 பேர் பேருந்தில் இருந்தனர். மூவர் காயமடைந்த நிலையில் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள் ஓட்டுநர் கரம் தாஸ், ராகேஷ் குமார் நடத்துநர், பிர்மா தேவி மற்றும் தன்ஷா ஆகியோர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

காயமடைந்தவர்கள் ஜெயேந்திர ரங்க்டா, தீபிகா மற்றும் பஹதூர் என்று காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Zomato, Swiggy APP மூலம் பண மோசடியா? புதிய Scam எச்சரிக்கை! | Cyber shield

இரவில் 9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு!

முதல் டெஸ்ட்: 4 அரைசதங்கள்; முதல் நாளில் பாகிஸ்தான் அசத்தல்!

பூ, புதிதாய் பூத்திருக்கு... ஸ்வாதி சர்மா!

சர்வதேச சாதனை நாயகி... ஸ்மிரிதி மந்தனா!

SCROLL FOR NEXT