கேஜரிவால் 8 கிலோ எடை குறைந்துள்ளார்: ஆம் ஆத்மி
சிறையில் கேஜரிவாலின் உடல் எடை குறைவு: ஆம் ஆத்மி கட்சி கவலை
சிறையில் அடைக்கப்பட்டுள்ள தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் எட்டு கிலோ எடை குறைந்துள்ளதாக ஆம் ஆத்மி கட்சி சனிக்கிழமை தெரிவித்துள்ளது.
கடந்த மாா்ச் 21 அன்று அமலாக்க இயக்குநரகத்தால் கைது செய்யப்பட்ட ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளா் கேஜரிவாலுக்கு வியாழக்கிழமை ( ஜூன் 20) இரவு விசாரணை நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
பெரும் திருப்புமுனையாக இந்த உத்தரவின்படி அவா் திகாா் சிறையில் இருந்து வெள்ளிக்கிழமை வெளியே வர இருந்த நிலையில் அமலாக்கத்துறை தலையீட்டால் தில்லி உயா்நீதிமன்றம் இடைக்கால தடையை விதித்துள்ளது.
இந்தநிலையில் தில்லி முதல்வரின் வழக்கமான எடை குறைவு மிகவும் கவலை அளிக்கிறது என்று ஆம் ஆத்மி கட்சி சனிக்கிழமை தெரிவித்துள்ளது. மார்ச் 21 அன்று, அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட நாளில், கேஜரிவால் 70 கிலோ எடையுடன் இருந்தார்.
பின்னர் ஜூன் 2ஆம் தேதி 63.5 கிலோவாகவும், ஜூன் 22ஆம் தேதி 62 கிலோவாகவும் எடை குறைந்துள்ளதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.
கேஜரிவாலின் உடல் எடை குறைவதைக் கருத்தில் கொண்டு, அவரது உணவில் பரோட்டா மற்றும் பூரியைச் சேர்க்க எய்ம்ஸ் மருத்துவக் குழு பரிந்துரைத்துள்ளது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக அரவிந்த் ஜேரிவாலுக்கு, எய்ம்ஸ் மருத்துவக் குழு சில பரிசோதனைகளை மேற்கொண்ட நிலையில் இந்த பரிந்துரையை வழங்கியுள்ளது.