File 
இந்தியா

பஞ்சாப்: மகள், தாய், வளர்ப்பு நாயை சுட்டுக்கொன்று தானும் தற்கொலை செய்துகொண்ட நபர்

மன அழுத்தம் காரணமாக தாய், மகளுடன் வளர்ப்பு நாயை சுட்டுக்கொன்ற பஞ்சாப் நபர்

DIN

பஞ்சாபில் மகள், தாய் மற்றும் வளர்ப்பு நாயை சுட்டுக்கொன்று தானும் தற்கொலை செய்துகொண்ட நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பஞ்சாப் மாநிலம், பர்னாலா மாவட்டத்தில் உள்ள ராம் ராஜ்ய காலனியில் வசித்து வந்தவர் குல்பீர் மன் சிங். இவர் உரிமம் பெற்ற துப்பாக்கியால் நேற்று மாலை தனது 21 வயது மகள் நிம்ரத் கௌரை திடீரென சுட்டுக்கொன்றார்.

பின்னர் அவரது தாயார் பல்வந்த் கௌர் (85) மற்றும் வளர்ப்பு நாயையும் சுட்டுக்கொன்று தானும் அதே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நிகழ்விடத்துக்கு விரைந்த காவல்துறையினர் சடலங்களை மீட்பு உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில், குல்பீர் நீண்ட நாட்களாக மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு இருந்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இச்சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. அண்மையில்தான் குல்பீரின் மகள் நிம்ரத் கனடாவிலிருந்து திரும்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மோடியின் கைப்பாவையாக மாறிய தேர்தல் ஆணையம்: கார்கே குற்றச்சாட்டு!

டிஐஜி வருண் குமாருக்கு எதிராக அவதூறு கருத்து தெரிவிக்க சீமானுக்கு இடைக் காலத் தடை!

அமர்நாத் யாத்திரை செல்ல நாளைமுதல் அனுமதியில்லை! காஷ்மீர் நிர்வாகம் அறிவிப்பு

ஏ சான்றிதழ் பெற்ற ரஜினி திரைப்படங்கள்!

எங்கள் கூட்டணியிலிருந்து எந்த கட்சியும் வெளியேறாது: அமைச்சர் கே.என்.நேரு

SCROLL FOR NEXT