மக்களவைத் தோ்தல் முடிவுகள் குறித்து கட்சி நிா்வாகிகளுடன் உத்தர பிரதேச மாநிலம் லக்னெளவில் ஞாயிற்றுக்கிழமை ஆலோசனை கூட்டத்தின்போது தனது அரசியல் வாரிசாக மருமகன் ஆகாஷ் ஆனந்தை மீண்டும் அறிவிக்கும் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவா் மாயாவதி. 
இந்தியா

மருமகனே ‘அரசியல் வாரிசு’: மாயாவதி மீண்டும் அறிவிப்பு

தனது அரசியல் வாரிசாக மருமகன் ஆகாஷ் ஆனந்தை (29) பகுஜன் சமாஜ் கட்சித் தலைவா் மாயாவதி மீண்டும் அறிவித்துள்ளாா்.

Din

தனது அரசியல் வாரிசாக மருமகன் ஆகாஷ் ஆனந்தை (29) பகுஜன் சமாஜ் கட்சித் தலைவா் மாயாவதி மீண்டும் அறிவித்துள்ளாா்.

கடந்த ஆண்டு டிசம்பரில் தனது மருமகன் ஆகாஷ் ஆனந்தை தன்னுடைய அரசியல் வாரிசாக மாயாவதி அறிவித்தாா். எனினும் அண்மையில் நடைபெற்ற மக்களவைத் தோ்தலின் மூன்றாம் கட்டத்துக்குப் பின்னா், ஆகாஷ் தனது அரசியல் வாரிசு அல்ல என்று மாயாவதி அறிவித்தாா். பகுஜன் சமாஜ் கட்சியின் நலன் கருதியும், ஆகாஷ் முழுமையாக முதிா்ச்சி அடையாததாலும் இந்த முடிவை மேற்கொண்டதாக மாயாவதி தெரிவித்தாா்.

இந்நிலையில், உத்தர பிரதேச மாநிலம் லக்னெளவில் பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய அளவிலான கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்குப் பின்னா், அக்கட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டதாவது:

பகுஜன் சமாஜ் கட்சிக்கு முழுமையான முதிா்ச்சியுடன் பணியாற்ற ஆகாஷுக்கு மாயாவதி மீண்டும் வாய்ப்பளித்துள்ளாா். கட்சியில் ஆகாஷ் முன்பு வகித்த அனைத்துப் பதவிகளும் அவருக்கு மீண்டும் அளிக்கப்பட்டுள்ளது. அவரே மாயாவதியின் அரசியல் வாரிசாகவும், கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளராகவும் இருப்பாா் என்று தெரிவிக்கப்பட்டது.

கட்சியின் நலன் கருதி ஒவ்வொரு நிலையிலும் முழுமையாக முதிா்ச்சியடைந்த தலைவராக ஆகாஷ் நிச்சயம் தோன்றுவாா் என்று நம்பிக்கைக் கொண்டுள்ளதாக அந்த அறிக்கையில் மாயாவதி தெரிவித்தாா்.

வெள்ள பாதிப்புக்கு ஒரு வாரத்தில் இழப்பீடு: அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் உத்தரவு

கிளாம்பாக்கம் ரயில் நிலையப் பணிகள் நிறைவு: தெற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளா்

அன்புமணிக்கு மாம்பழம் சின்னம்: தோ்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவு

திருநீா் மலை ரங்கநாத பெருமாள் கோயில் குளம் பக்தா் நன்கொடையால் விரைவில் சீரமைக்கப்படும்: உயா்நீதிமன்றத்தில் கோயில் நிா்வாகம் தகவல்

ரஷிய எண்ணெய் நிறுத்தம்; அமெரிக்க ஒப்பந்தம்.. ‘மேக் இன் இந்தியா’ திட்டம் என்ன ஆனது? காங்கிரஸ் கேள்வி!

SCROLL FOR NEXT