இந்தியா

ஸ்விட்சர்லாந்தில் தலாய் லாமா!

திபெத்திய பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் தலாய் லாமாவுக்கு வரவேற்பு

DIN

திபெத்திய பெளத்த மத தலைவர் தலாய் லாமா சனிக்கிழமை ஸ்விட்சர்லாந்தின் ஜூரிச் சென்றடைந்தார்.

ஜூரிச்சில் உள்ள ஹோட்டலுக்கு வந்த தலாய் லாமாவுக்கு திபெத்திய பாரம்பரிய முறைப்படி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது திபெத்திய கலைஞர்கள் பாரம்பரிய பாடல்கள் மற்றும் நடனங்களை நிகழ்த்தினர்.

மேலும் ஹோட்டலுக்கு வெளியே அவரை வரவேற்க ஆயிரக்கணக்கான திபெத்தியர்களும் நலம் விரும்பிகளும் பூங்கொத்துகளுடன் சாலையில் காத்திருந்தனர்.

தொடர்ந்து, முழங்கால் அறுவை சிகிச்சைக்காக தலாய் லாமா இன்று அமெரிக்கா செல்ல உள்ளார். முன்னதாக வெள்ளிக்கிழமை தலாய் லாமா தனது முழங்கால் அறுவை சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல தர்மசாலாவில் இருந்து தில்லி புறப்பட்டு சென்றார்.

இந்நிகழ்வின்போது காங்க்ரா விமான நிலையத்தில் கூடியிருந்த திபெத்தியர்கள் அவருக்கு வாழ்த்து கூறி வழியனுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

10 ஆண்டுகளில் மாணவர் தற்கொலைகள் 65% அதிகரிப்பு! ஏன்?

பெங்களூரில் காரில் தனியாக பயணித்தால் வரி விதிப்பா?

பாகிஸ்தானில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு: 12 பேர் பலி

திருடப்பட்ட 6 லட்சம் கைப்பேசிகள் மீட்பு; லட்சக்கணக்கான குடும்பங்களின் டிஜிட்டல் பாதுகாப்பும் மீட்டெடுப்பு!

கரூர் பலி: செந்தில் பாலாஜி விளக்கம் சந்தேகத்தை எழுப்புகிறது; அண்ணாமலை

SCROLL FOR NEXT