ராகுல் காந்தி -
இந்தியா

மோடி தப்ப முடியாது! 15 நாள் ஆட்சியில் 10 பிரச்னைகள்: ராகுல் காந்தி

பிரச்னைகளுக்கு பதிலளிக்காமல் மோடி தப்பிக்க அனுமதிக்க மாட்டோம்.

DIN

தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் அமர்ந்த முதல் 15 நாள்களில் 10 பிரச்னைகள் ஏற்பட்டுள்ளதாக காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி பட்டியலிட்டுள்ளார்.

மேலும், பிரச்னைகளுக்கு பதிலளிக்காமல் பிரதமர் நரேந்திர மோடியை தப்பிக்க விடமாட்டோம் என்றும் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ராகுல் காந்தி வெளியிட்ட எக்ஸ் பதிவில் தெரிவித்திருப்பதாவது:

“தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல் 15 நாள்கள்!

1. பயங்கர ரயில் விபத்து

2. காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல்கள்

3. ரயில்களில் பயணிகள் சந்திக்கும் அவல நிலை

4. நீட் தேர்வு முறைகேடு

5. நீட் முதுநிலை தேர்வு ரத்து

6. யுஜிசி நெட் வினாத்தாள் கசிவு

7. பால், பருப்பு வகைகள், எரிவாயு, சுங்கக் கட்டணம் உயர்வு

8. காடுகளில் தீ

9. தண்ணீர் பற்றக்குறை

10. முன்னெச்சரிக்கை இல்லாததால் வெப்ப அலை உயிரிழப்புகள்

நரேந்திர மோடி தனது அரசாங்கத்தை காப்பாற்றுவதில் மும்முரமாக இருக்கிறார்.

அரசியல் சாசனத்தின் மீது மோடி மற்றும் அவரது அரசாங்கம் நடத்தும் தாக்குதலை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. எந்த சூழ்நிலையிலும் இதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.

இந்தியாவின் பலமான எதிர்க்கட்சியாக அழுத்தம் கொடுப்பதை தொடர்ந்து செய்வோம். மக்களின் குரலாக இருப்போம். பிரச்னைகளுக்கு பொறுப்பேற்காமல் பிரதமரை தப்பிக்க அனுமதிக்க மாட்டோம்.” எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, இன்று காலை மக்களவைக்கு வருகைதந்த மோடி, செய்தியாளர்கள் மத்தியில் பேசும்போது, அவசரநிலை பிரகடனத்தை குறிப்பிட்டு, அரசியல் சாசனம் துண்டு துண்டாக கிழிக்கப்பட்டு நாளையுடன் 50 ஆண்டுகள் ஆவதாக விமர்சித்திருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தென்னிந்திய இயற்கை வேளாண்மை மாநாட்டை தொடங்கி வைத்த பிரதமர் மோடி - புகைப்படங்கள்

“சிறுவயதிலேயே தமிழ் கற்றிருக்கலாம் என விரும்புகிறேன்!” பிரதமர் மோடி உரை! | Coimbatore

சபரிமலை தரிசனம்: 5000 பேருக்கு மட்டுமே ஸ்பாட் புக்கிங்!

வாரீ எனர்ஜிஸ் பங்குகள் 3% சரிவு!

தமிழக அரசு அனுப்பிய மெட்ரோ திட்ட அறிக்கையில் குறைகள்!

SCROLL FOR NEXT