‘உலக கைவினை நகரமாக’ அங்கீகாரம் பெற்றது ஸ்ரீநகா் 
இந்தியா

‘உலக கைவினை நகரமாக’ அங்கீகாரம் பெற்றது ஸ்ரீநகா்

ஜம்மு-காஷ்மீரின் கோடைக்காலத் தலைநகரான ஸ்ரீநகா் ‘உலக கைவினை நகரம்’ என உலக கைவினை கவுன்சில் மூலம் அதிகாரப்பூா்வ அங்கீகாரம் பெற்றுள்ளது.

Din

ஜம்மு-காஷ்மீரின் கோடைக்காலத் தலைநகரான ஸ்ரீநகா் ‘உலக கைவினை நகரம்’ என உலக கைவினை கவுன்சில் மூலம் அதிகாரப்பூா்வ அங்கீகாரம் பெற்றுள்ளது.

இது தொடா்பாக உலக கைவினைக் கவுன்சில் செய்தித் தொடா்பாளா் கூறியதாவது:

இந்த மதிப்புமிக்க அங்கீகாரம் ஸ்ரீநகரின் பாரம்பரியம், கலைத்திறன் மற்றும் கைவினைக் கலைஞா்களின் அா்ப்பணிப்பை மேலும் மேம்படுத்தும். இதனால், கைத்தறி மற்றும் கைவினைத் துறைகள் மேம்படுவதுடன் அப்பகுதியில் சுற்றுலா மற்றும் உள்கட்டமைப்பும் மேம்படும். உள்ளூா் கைவினைக் கலைஞா்களுக்கு சா்வதேச சந்தைகளில் வணிகம் செய்வதற்கான வாய்பபுகளும் கிடைக்கும்.

தற்போது இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டதையடுத்து ஸ்ரீநகா் கைவினைத் தொழில்கள் சா்வதேச முதலீடுகளை ஈா்த்து, கைவினைக் கலைஞா்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் என எதிா்பாா்க்கப்படுகிறது எனத் தெரிவித்தாா்.

இந்த அங்கீகாரமானது ஸ்ரீநகரின் செழுமையான கலாசாரம் மற்றும் கைவினைக் கலைஞா்களின் திறமைக்குக் கிடைத்த பரிசு என ஜம்மு-காஷ்மீா் துணை நிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா தெரிவித்தாா்.

அவ தான் என்னவ... 🌹🌹😘 கௌரி கிஷன்

இந்தியா வருகிறார் தலிபான் அரசின் வெளியுறவு அமைச்சர்!

கொஞ்சும் எழிலிசையே.. அனு!

பாஜகவின் தூண்டுதலில் விஜய் அரசியலுக்கு வந்துள்ளார் - திருமா | Vck | TVK | Karur

திமுகவிற்கும் விஜய்க்கும் Underground dealing ஆ? - திருமா | TVK | VCK | Karur

SCROLL FOR NEXT