முகப்பு
இந்தியா

பிரதமர் மோடியை விமர்சித்த ப.சிதம்பரம்!

அவசரநிலை குறித்து பிரதமர் மோடியின் கருத்தை ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.

Updated On : 25 ஜூன், 2024 at 8:16 AM
காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம்
பகிர்:

அவசரநிலையைப் பற்றி பிரதமர் மோடி கூறிய கருத்தை காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் ப.சிதம்பரம் கடுமையாக விமர்சித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அவசரநிலை பிரகடனம் அறிவித்து இன்றுடன் 50 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி பிரதமர் மோடி அதனை விமர்சித்துக் கருத்துத் தெரிவித்திருந்தார்.

இதுதொடர்பான பிரதமர் மோடியின் எக்ஸ் தளப் பதிவில், ”அதிகாரத்தைப் பிடிக்க, அன்றைய காங்கிரஸ் அரசு ஒவ்வொரு ஜனநாயகக் கொள்கைகளையும் புறக்கணித்து, நாட்டை சிறையில் அடைத்தது. அவசரநிலையை கொண்டு வந்தவர்கள் அரசியலமைப்பின் மீது அன்பு காட்ட உரிமை இல்லை. கூட்டாட்சி முறையை அழித்து, அரசியலமைப்பின் அனைத்து அம்சங்களையும் மீறியவர்கள் காங்கிரஸ்.” என்று குறிப்பிட்டிருந்தார்.

பிரதமர் மோடி தெரிவித்தக் கருத்தினை விமர்சிக்குமாறு தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் ப. சிதம்பரம், “அரசியலமைப்பைப் பாதுகாக்க அவசரநிலை பிரகடனம் நமக்கு நினைவுபடுத்துகிறது என்பது உண்மையே.

ஆனால், மற்றொரு அவசரநிலை பிரகடனத்தைத் தடுக்க அரசியலமைப்பு நினைவுபடுத்தியுள்ளது. அதனால்தான் மக்கள் பாஜகவின் திட்டங்களை முறியடிக்கும்படி இந்தமுறை வாக்குகளைச் செலுத்தியுள்ளனர்.

அரசியலமைப்புச் சட்டத்தின் கட்டமைப்பை எந்த மனிதரோ, தெய்வீக சக்தியுடைய ஆட்சியாளரோ மாற்ற முடியாதவாறு 18-வது மக்களவைத் தேர்தலில் மக்கள் தங்களது வாக்குகளைச் செலுத்தியுள்ளனர்.

இந்தியா எப்போதும் சுதந்திரமான, ஜனநாயகமான, மதச்சார்பற்ற நாடாகத் திகழும்” என்று அவர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →