மக்களவை -
இந்தியா

அவசரநிலைக்கு எதிரான தீர்மானம்: மக்களவையில் அமளி

அவசரநிலைக்கு எதிரான தீர்மானம் வாசிக்கப்பட்டதால் மக்களவையில் அமளி ஏற்பட்டது.

DIN

புது தில்லி: இந்திரா காந்தி பிரதமராக இருந்த போது, அவசரநிலை கொண்டு வரப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்கும் தீர்மானத்தை, அவைத் தலைவர் ஓம் பிர்லா மக்களவையில் வாசித்ததால், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.

1975ஆம் ஆண்டு ஜூன் 25ஆம் தேதி நாட்டில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டதற்கு, மக்களவையில் கண்டனம் தெரிவித்து தீர்மானம் கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து, அவசர நிலைக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்களையில் மௌனம் செலுத்தப்பட்டதால் அவையில் அமளி ஏற்பட்டது.

இந்திரா காந்தி பிரதமராக இருந்த போது அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து அவைத் தலைவர் ஓம் பிர்லா தீர்மானத்தை வாசித்தார். அதில், நாட்டையே சிறையாக மாற்றியது அவசரநிலை. அவசரநிலை என்பது நமது அரசமைப்பின் மீது தொடக்கப்பட்ட தாக்குதல். நம் நாட்டில் அநியாயம் நிலவிய காலம் அது. அவசரநிலை பிரகடனம் நாட்டின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல் எனவும் கூறினார்.

அவைத்தலைவர் ஓம் பிர்லாவின் கருத்துக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து அவையிலேயே முழக்கமிட்டனர். அவசர நிலைக்கு எதிரான தீர்மானத்தை அவைத்தலைவர் ஓம் பிர்லா வாசித்ததால், எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து தொடர் முழக்கம் எழுப்பியதால் அமளி ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சவரனுக்கு ரூ.800 குறைந்த தங்கம் விலை!

மசோதாவை கிடப்பில் போட ஆளுநருக்கு அதிகாரமில்லை! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

நெல் ஈரப்பதம் அதிகரிப்பு கோரிக்கையை நிராகரித்தது மத்திய அரசு!

ராணிப்பேட்டை அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் மூன்று பேர் பலி

இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பு குறைவு! கீர்த்தி சுரேஷ்

SCROLL FOR NEXT