முகப்பு
இந்தியா

அரவிந்த் கேஜரிவாலுக்கு உடல்நலக் குறைவு

தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுக்கு உடல்நலக் குறைவு

Updated On : 26 ஜூன், 2024 at 7:34 AM
கேஜரிவால்
பகிர்:

புது தில்லி: நீதிமன்றம் அழைத்துச் செல்லப்பட்ட தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுக்கு உடல்நலக் குறைபாடு ஏற்பட்டது.

தில்லி கலால் கொள்கை மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலை, சிபிஐ இன்று நீதிமன்றத்தில் கைது செய்தது.

மேலும், அரவிந்த கேஜரிவாலை 5 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி நீதிமன்றத்தில் சிபிஐ தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கு விசாரணை நடைபெற்றுக் கொண்டிருந்த போது, அரவிந்த் கேஜரிவால் உடல்நிலை பாதிக்கப்பட்டது. நீர்சத்துக் குறைந்ததால், கேஜரிவால் உடல்நிலை பாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

உடனடியாக அவர் நீதிமன்ற அறையிலிருந்து வெளியே கொண்டு வரப்பட்டு, அவருக்கு தேநீர் மற்றும் பிஸ்கட் வழங்கப்பட்டது. சிறிது நேரம் அவருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →