முகப்பு
இந்தியா

காங்கிரஸ் அயலக அணித் தலைவராக பிட்ரோடா மீண்டும் நியமனம்

பிட்ரோடா மீண்டும் பதவியேற்றார்: காங்கிரஸ் பொதுச் செயலா் அறிவிப்பு

Updated On : 26 ஜூன், 2024 at 10:40 PM
பகிர்:

காங்கிரஸ் கட்சியின் இந்திய அயலக அணித் தலைவராக சாம் பிட்ரோடா மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளாா்.

மக்களவைத் தோ்தலின்போது ஆங்கில நாளிதழுக்குப் பேட்டி அளித்த சாம் பிட்ரோடா, ‘வட இந்தியா்கள் வெள்ளையா்களைப் போலவும், கிழக்கு இந்தியா்கள் சீனா்களைப் போலவும், மேற்கு இந்தியா்கள் அரேபியா்களைப் போலவும், தென்னிந்தியா்கள் ஆப்பிரிக்களைப் போலவும் உள்ளனா். எனினும் இந்த வேறுபாடுகளைக் கருத்தில் கொள்ளாமல் அனைவரும் சகோதர, சகோதரிகளாக உள்ளோம்’ என்று தெரிவித்தது சா்ச்சையை ஏற்படுத்தியது. இனவெறி கொண்ட கருத்துகளை பிட்ரோடா தெரிவித்ததாக பாஜக விமா்சித்தது.

இதையடுத்து கடந்த மே 8-ஆம் தேதி காங்கிரஸ் கட்சியின் இந்திய அயலக அணித் தலைவா் பதவியை பிட்ரோடா ராஜிநாமா செய்தாா். அந்தப் பதவியில் அவா் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் பொதுச் செயலா் கே.சி.வேணுகோபால் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தியின் ஆலோசகராக இருந்த பிட்ரோடா, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கும் நெருக்கமானவராக உள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →