ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் தனக்கு எவ்வளவு கொடுமைகள் செய்தாலும் அடிபணிய மாட்டார் என்று பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் தெரிவித்தார்.
கலால் ஊழலுடன் தொடர்புடைய முறைகேடு வழக்கில் முதல்வர் அரவிந்த் கேஜரிவாலை மத்திய புலனாய்வுத்துறை(சிபிஐ) புதன்கிழமை கைது செய்தது. அவரை மூன்று நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐக்கு நீதிமன்றம் அனுமதி அளித்தது.
இதுதொடர்பாக முதல்வர் மான் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில்,
கேஜரிவாலின் புகைப்படத்தை வெளியிட்டு, இந்த படம் சர்வாதிகாரத்திற்கு எதிரான போராட்டத்தைப் பிரதிபலிக்கிறது. நீங்கள் எவ்வளவுதான் கொடுமைப்படுத்தினாலும் அரவிந்த் கேஜரிவால் அடிபணியமாட்டார்.
அமலாக்கத்துறையின் ஜாமீனுக்குப் பிறகு, கேஜரிவாலை சிபிஐ கைது செய்திருப்பது பாஜகவின் உத்தரவின்பேரில் சிபிஐ செயல்படுவது அப்பட்டமாகத் தெரிகிறது.
விசாரணை அமைப்பின் விண்ணப்பத்தின் மீதான வாதங்களைக் கேட்டபின் தில்லி முதல்வர் குற்றமற்றவர் என்று அவர் கூறினார்.
பா.ஜ.க. மத்திய புலனாய்வு அமைப்புகள் தவறான நோக்கத்துடனும், அரசியல் காழ்ப்புணர்ச்சியுடனும் செயல்படுவதாக ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.