சிறுவன் ரன்வீர் பார்தி 
இந்தியா

ஒருநாள் ஐபிஎஸ் ஆன மூளைக் கட்டியால் பாதிக்கப்பட்ட சிறுவன்!

வாரணாசியில் மூளை கட்டியால் பாதிக்கப்பட்ட சிறுவனை காவல்துறையினர் ஒருநாள் ஐபிஎஸ் ஆக்கியுள்ளனர்.

DIN

வாரணாசியில் மூளைக் கட்டியால் பாதிக்கப்பட்ட சிறுவனின் ஐபிஎஸ் ஆகும் கனவை நிறைவேற்ற, அச்சிறுவனை ஒரு நாள் ஐபிஎஸ் ஆக்கி காவல்துறையினர் நெகிழ வைத்துள்ளனர்.

உத்திரப் பிரதேசத்தின் வாரணாசியிலுள்ள ரன்வீர் பார்தி என்கிற 9 வயது சிறுவன் மூளைக் கட்டியால் பாதிக்கப்பட்டு மஹாமன புற்றுநோய் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்துள்ளார்.

அந்தச் சிறுவனுக்கு ஐபிஎஸ் அதிகாரி ஆகவேண்டும் என்ற கனவு இருந்துள்ளது. எனவே, அதனை நிறைவேற்றும் விதமாக வாரணாசி காவல்துறையினர் சிறுவனை ஒரு நாள் ஐபிஎஸ் ஆக்கி, அவரை ஐபிஎஸ் அதிகாரி இருக்கையில் அமர வைத்துள்ளனர். இந்த நிகழ்வு வாரணாசி காவல்துறை சார்பில் எக்ஸ் தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது

அந்தப் பதிவில், காக்கி உடை அணிந்த அந்தச் சிறுவனிடம் காவல்துறை அதிகாரிகள் உரையாடுவது போலவும், கைகுலுக்குவது போலவும் காணொளி பதிவிடப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, சிறுவன் ரன்வீருடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட காவல்துறை அதிகாரிகள், அவனது கனவினை நிறைவேற்றியதாக தெரிவித்தனர்.

இந்த நிகழ்வு சமூக வலைத்தளங்களில் பலரது பாராட்டுகளைப் பெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உரத்துப்பட்டியில் தொடா் திருட்டு: ஆட்சியா், எஸ்.பி.யிடம் பொதுமக்கள் புகாா்

மாற்றுத்திறனாளிகள் குறைதீா் கூட்டம் ஒத்திவைப்பு

பழனி மலைக் கோயிலில் நாளை பிற்பகலில் நடை அடைப்பு

ரயிலில் கடத்திவரப்பட்ட 5 கிலோ கஞ்சா பறிமுதல்

பொதுப் பாதையை ஆக்கிரமித்து நியாய விலைக் கடை கட்டுவதற்கு பொதுமக்கள் எதிா்ப்பு

SCROLL FOR NEXT