படம் | பிடிஐ
இந்தியா

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு ஜூலை 12 வரை நீதிமன்றக் காவல்!

கேஜரிவால் சிபிஐ விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கவில்லை என்று நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.

DIN

தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலின் 14 நாள் நீதிமன்றக் காவல் கோரும் சிபிஐ மனு தில்லி நீதிமன்றத்தில் இன்று(ஜூன் 29) விசாரணைக்கு வந்தது.

சிபிஐ தரப்பில், கேஜரிவால் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கவில்லை என்று நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது. இதையடுத்து அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்த வேண்டியுள்ளதால், அவரை 14 நாள் நீதிமன்றக் காவலில் விசாரிக்க சிபிஐ தரப்பில் அனுமதி கோரப்பட்டது.

சிபிஐ தரப்பு மனு மீதான விசாரணையில் உத்தரவு பிறப்பிக்காமல் வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், அதைத் தொடர்ந்து கேஜரிவாலை 14 நாள் நீதிமன்றக் காவலில் விசாரிக்க தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக சிபிஐ காவலில் உள்ள முதல்வர் அரவிந்த் கேஜரிவாலை விடுவிக்கக் கோரி தில்லி டிடியு மார்க்கில் உள்ள பாஜக தலைமை அலுவலகம் அருகே ஆம் ஆத்மி கட்சி தலைவர்களும் தொழிலாளர்களும் இன்று(ஜூன் 29) போராட்டம் நடத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு!

ரஷியா ஒப்புக்கொண்டால் இருதரப்பு பேச்சுக்கு தயார்: உக்ரைன் அதிபர்

போர் நிறுத்த முதல்படி..! அமைதிப் பேச்சுவார்த்தை பணிகளைத் தொடங்கிய டிரம்ப்!

ராணிப்பேட்டை ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் முற்றுகை

நல்ல நாள் இன்று: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT