கோப்புப் படம் 
இந்தியா

பிகாருக்கு சிறப்பு அந்தஸ்து: முதல்வர் நிதிஷ் மீண்டும் கோரிக்கை!

பிகாருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குமாறு பிகார் முதல்வர் நிதிஷ்குமார் மீண்டும் கோரிக்கை வைத்துள்ளார்

DIN

பிகாருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குமாறு பிகார் முதல்வரும் ஒருங்கிணைந்த ஜனதா தளக்கட்சியின் தலைவருமான நிதிஷ்குமார் மீண்டும் கோரிக்கை வைத்துள்ளார்.

ஒருங்கிணைந்த ஜனதா தளத்தின் பொதுக்கூட்டம் இன்று (ஜூன் 29) தில்லியில், கட்சித்தலைவரான பிகார் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் மற்றும் ஒருங்கிணைந்த ஜனதா தளத்தின் தலைவர்கள் உள்பட பல்வேறு கட்சி எம்.பி.க்களும் கலந்து கொண்டனர். மேலும் கட்சியின் மாநிலங்களவை எம்.பி. சஞ்சய் ஜா, கட்சியின் செயல்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்த கூட்டத்தின்போது, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பிரதமர் மோடியின் தலைமையிலான பாஜகவின் மக்களவையில், ஒருங்கிணைந்த ஜனதா தளத்தின் ஆதரவை தக்கவைத்துக் கொள்வதற்கு விரும்புவதாகவும் தெரிவித்தனர். இந்த பொதுக்கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டன.

இந்த பொதுக்கூட்டத்தில், பிகாருக்கு சிறப்பு அந்தஸ்து பெறுவதற்கான கோரிக்கைகளே வலியுறுத்தப்பட்டன. அதாவது, சிறப்பு அந்தஸ்து பெறும் மாநிலங்களுக்கு மத்திய அரசின் வரி வருவாயில் மாநிலத்தின் பங்கை அதிகரிக்கும். இதுதவிர, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பட்டியலினத்தினர் மற்றும் பட்டியலின பழங்குடியினருக்கான இடஒதுக்கீட்டை மத்திய அரசு சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையும் வைத்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருவள்ளுவா் பல்கலை.யில் இன்று பட்டமளிப்பு விழா

திருவள்ளூா்: குறைத்தீா் கூட்டத்தில் 362 மனுக்கள்

விளைபயிா்களை சேதப்படுத்திய ஒற்றை யானை விரட்டியடிப்பு

மேல்மருவத்தூா் பள்ளிக்குழும விளையாட்டு விழா

ஆற்காட்டில் கிருஷ்ண ஜெயந்தி உறியடி விழா

SCROLL FOR NEXT