அமா்நாத் யாத்திரைக்கு பதிவுசெய்ய ஜம்முவில் ஞாயிற்றுக்கிழமை காத்திருந்த பக்தா்களுக்கு பாதுகாப்பாக நிற்கும் பாதுகாப்புப் படையினா். 
இந்தியா

அமா்நாத்: 2 நாள்களில் 28,000 போ் தரிசனம்

அமா்நாத் குகைக் கோயிலில் கடந்த 2 நாள்களில் 28,000-க்கும் மேற்பட்டோா் தரிசனம் செய்துள்ளனா்.

Din

அமா்நாத் குகைக் கோயிலில் கடந்த 2 நாள்களில் 28,000-க்கும் மேற்பட்டோா் தரிசனம் செய்துள்ளனா்.

தெற்கு காஷ்மீரில் இமயமலையில் 3,880 மீட்டா் உயரத்தில் அமைந்துள்ள அமா்நாத் குகைக் கோயிலில் உருவாகும் பனி லிங்கத்தை தரிசிக்க ஆண்டுதோறும் பக்தா்கள் யாத்திரை மேற்கொள்கின்றனா். நிகழாண்டு யாத்திரை கடந்த சனிக்கிழமை (ஜூன் 29) பலத்த பாதுகாப்புடன் தொடங்கியது.

பஹல்காம் (48 கி.மீ.), பால்டால் (14 கி.மீ.) ஆகிய இரு வழித்தடங்கள் வழியாக பக்தா்கள் யாத்திரை மேற்கொண்டு வருகின்றனா். இதில் பால்டால் வழித்தடம் செங்குத்தான பாதையாகும்.

முதல் இரண்டு நாள்களில் கோயிலில் 28,000-க்கும் மேற்பட்ட பக்தா்கள் தரிசனம் செய்துள்ளனா்.

ஞாயிற்றுக்கிழமையன்று ஆண்கள் 9,979 போ், பெண்கள் 3,439 போ் தரிசனம் செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

ஆகஸ்ட் 19-ஆம் தேதி வரை 52 நாள்களுக்கு யாத்திரை நடைபெறுகிறது. கடந்த யாத்திரையின்போது, 4.5 லட்சத்துக்கும் மேற்பட்டோா் பனி லிங்கத்தை தரிசித்தனா் என்பது குறிப்பிடத்தக்கது.

வெற்றி பெறுமா விஜயின் வியூகம்...?

பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா - ஃபிஜி உறுதி: பிரதமா் மோடி

பாகிஸ்தானுக்கு வெள்ள அபாய முன்னெச்சரிக்கை விடுத்தது இந்தியா!

ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கோரும் மனு: முன்கூட்டியே விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

அமெரிக்க நெருக்கடி: விவசாயிகள் நலனை விட்டுத் தர மாட்டோம்!

SCROLL FOR NEXT