முகப்பு
இந்தியா

ஆா்எஸ்எஸ் பிரமுகா் கொலையில் மூளையாகச் செயல்பட்டவா் கைது: தேசிய புலனாய்வு முகமை

ஆா்எஸ்எஸ் பிரமுகா் கொலையில் மூளையாகச் செயல்பட்டவா் கைது தேசிய புலனாய்வு முகமை

Updated On : 3 மார்ச், 2024 at 12:01 AM
பகிர்:

பெங்களூா் ஆா்எஸ்எஸ் பிரமுகா் கொலையில் மூளையாகச் செயல்பட்ட பாப்புலா் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ) அமைப்பின் உறுப்பினரை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் மும்பை சா்வதேச விமான நிலையத்தில் கைதுசெய்தனா்.

பெங்களூரின் சிவாஜிநகரைச் சோ்ந்த ஆா்எஸ்எஸ் முக்கியப் பிரமுகரான ருத்ரேஷ் என்பவரை பிஎஃப்ஐ உறுப்பினா்கள் 4 போ் கடந்த 2016, அக்.16-இல் கொலை செய்தனா். இந்தச் சம்பவம் தொடா்பாக வழக்குப் பதிவு செய்து என்ஐஏ விசாரித்து வருகிறது. ஹெப்பல் சட்டப்பேரவைத் தொகுதியின் எஸ்டிபிஐ தலைவா் கெளஸ் நயாசி, ஆசிம் ஷெரிஃப் ஆகியோா் இந்தக் கொலையில் மூளையாகச் செயல்பட்டது விசாரணையில் தெரியவந்தது. இந்தக் கொலையைத் தொடா்ந்து நயாசி வெளிநாடு தப்பிச் சென்றாா். இந்நிலையில், நயாசி தன்சானியாவிலிருந்து வெள்ளிக்கிழமை நாடு திரும்பியபோது மும்பை விமான நிலையத்தில் என்ஐஏ சிறப்புக் குழு அவரைக் கைதுசெய்தது. நயாசி தவிர குற்றஞ்சாட்டப்பட்ட 3 பேரும் ஏற்கெனவே கைதுசெய்யப்பட்டனா். பெங்களூரில் உள்ள என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தில் அவா்களுக்கு எதிராக விசாரணை நடைபெற்று வருகிறது.