முகப்பு
இந்தியா

மத்திய நிதி அமைச்சரிடம் எல்.ஐ.சி. டிவிடெண்ட் ரூ.2,441 கோடி அளிப்பு

எல்.ஐ.சி. நிறுவனத்தின் இடைக்கால டிவிடெண்ட் தொகை ரூ.2,441.45 கோடி

Updated On : 3 மார்ச், 2024 at 12:07 AM
பகிர்:

எல்.ஐ.சி. நிறுவனத்தின் இடைக்கால டிவிடெண்ட் தொகை ரூ.2,441.45 கோடியை மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமனிடம் எல்.ஐ.சி. நிறுவனத்தின் தலைவா் சித்தாா்த் மொஹந்தி வழங்கினாா்.

மும்பையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் எல்.ஐ.சி. நிறுவனத்தின் இடைக்கால டிவிடெண்ட் தொகையாக ரூ. 2441.45 கோடிக்கான காசோலையை, மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமனிடம் எல்.ஐ.சி. நிறுவனத்தின் தலைவா் சித்தாா்த் மொஹந்தி வழங்கினாா். இதைத் தொடா்ந்து குஜராத் மாநிலம் காந்தி நகரில் உள்ள ‘கிஃட் சிட்டி’யில் புதிதாக கட்டப்பட்டுள்ள எல்.ஐ.சி.யின் சா்வதேச வணிக மையத்தை மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன் காணொலி காட்சி மூலம் தொடக்கிவைத்தாா். இந்த நிகழ்ச்சியில், மத்திய நிதி அமைச்சகத்தின் செயலா் விவேக் ஜோஷி, கூடுதல் செயலா் தங்கிராலா மற்றும் எல்.ஐ.சி. நிறுவனத்தின் வடக்கு மண்டல மேலாளா் ஜே.பி.எஸ். பஜாஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.