பாத்திரத்தில் சிக்கிய சிறுத்தையின் தலை 
இந்தியா

பாத்திரத்தில் சிக்கிய சிறுத்தையின் தலை! 5 மணிநேரம் தவித்த சிறுத்தை!!

5 மணிநேரம் தவித்த சிறுத்தையை வனத் துறை அதிகாரிகள் பாத்திரத்தை வெட்டிஎடுத்து பத்திரமாக மீட்டனர்.

DIN

மகாராஷ்டிரத்தில் குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்த சிறுத்தையின் தலை பாத்திரத்தில் மாட்டிக்கொண்ட சுவாரசியமான சம்பவம் அரங்கேறியுள்ளது.

வீட்டில் இருந்த பாத்திரத்தில் தலை மாட்டிக்கொண்டதால், 5 மணிநேரம் தவித்த சிறுத்தையை வனத் துறை அதிகாரிகள் பாத்திரத்தை வெட்டிஎடுத்து பத்திரமாக மீட்டனர்.

மகாராஷ்டிரத்தின் துலே மாவட்டத்திலுள்ள காட்டுப்பகுதியிலிருந்த சிறுத்தை கிராமத்திலுள்ள குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்துள்ளது. வீடுகளின் பின்புறம் சுற்றிவந்த சிறுத்தை, அங்கிருந்த மாட்டுத் தொழுவதினுள் புகுந்துள்ளது.

அங்கு வைக்கப்பட்டிருந்த பாத்திரத்தில் சிறுத்தையின் தலை சிக்கியுள்ளது. தலையை வெளியே எடுக்க முடியாததால், போராடிய சிறுத்தை ஒரு கட்டத்துக்கு மேல் களைப்பில் அங்கேயே படுத்து தவித்துள்ளது.

இது தொடர்பாக தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த வனத் துறை அதிகாரிகள், சிறுத்தையின் கால்களைக் கட்டி, பாத்திரத்தை வெட்டி எடுத்து சிறுத்தையின் தலையை விடுவித்தனர்.

பின்னர் சிறுத்தை கூண்டுக்குள் அடைக்கப்பட்டு, குடியிருப்புப் பகுதியிலிருந்து காட்டுப்பகுதிக்கு கொண்டுசெல்லப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”காங்கிரஸ் செய்த துரோகம்! பராசக்தி படக்குழுவுக்கு வாழ்த்துகள்” அண்ணாமலை பேட்டி

அடுத்த 2 மணி நேரத்துக்கு 6 மாவட்டங்களில் மழை!

திமுக ஆட்சியில் அரசு மருத்துவமனையில் கூட பாதுகாப்பு இல்லை: அண்ணாமலை

"WE SHALL COME BACK!" பாதையை விட்டு விலகியது Pslv-C62! ISRO தலைவர் வி. நாராயணன்

ஜன. 23-ல் பிரதமர் மோடி தமிழகம் வருகை! ஒரே மேடையில் என்டிஏ கூட்டணி கட்சித் தலைவர்கள்!

SCROLL FOR NEXT