முகப்பு
தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால்
இந்தியா

விசாரணைக்கு ஆஜராகத் தயார்: தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால்

இந்தியா

விசாரணைக்கு ஆஜராகத் தயார்: தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால்

Updated On : 4 மார்ச், 2024 at 5:16 AM
தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால்
பகிர்:

தேதியை தெரிவித்தால் காணொளியில் விசாரணைக்கு ஆஜராக தயாராக உள்ளதாக அமலாக்கத்துறைக்கு தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் கடிதம் எழுதியுள்ளார்.

தில்லி கலால் கொள்கையை வகுத்து நடைமுறைப்படுத்தியதில் ஊழல் நடைபெற்ாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதன் காரணமாக தில்லி முன்னாள் துணை முதல்வா் மனீஷ் சிசோடியா, ஆம் ஆத்மி மாநிலங்களவை உறுப்பினா் சஞ்சய் சிங் உள்ளிட்டோா் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.

இந்தக் கலால் கொள்கை முறைகேட்டில் தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலுக்கும் தொடா்பு இருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. ஆகையால், விசாரணைக்கு ஆஜராகுமாறு அவருக்கு ஏற்கெனவே கடந்த ஆண்டு அக்டோபரில் அமலாக்கத் துறையினா் அழைப்பாணை அனுப்பியிருந்தனா். ஆனால் அவா் விசாரணைக்கு ஆஜராகவில்லை.

இவ்வாறு தொடா்ச்சியாக அனுப்பப்பட்ட 7 அழைப்பாணைகளை முதல்வா் அரவிந்த் கேஜரிவால் புறக்கணித்த நிலையில், மீண்டும் 8வது முறையாக அண்மையில் அவருக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது. அதன்படி மார்ச் 4-இல் (திங்கள்கிழமை) விசாரணைக்கு ஆஜராகுமாறு அறிவுறுத்தப்பட்டது.

இந்த நிலையில் தேதியை தெரிவித்தால் விசாரணைக்கு ஆஜராக தயாராக உள்ளதாக அமலாக்கத்துறைக்கு தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் கடிதம் எழுதியுள்ளார். அதில், அமலாக்கத்துறையின் சம்மன் சட்டவிரோதமானது என்றாலும் பதிலளிக்க தயாராக உள்ளேன்.

மார்ச் 12ஆம் தேதிக்கு பிறகு காணொளி காட்சி மூலம் விசாரணைக்கு ஆஜராக தயாராக இருக்கிறேன் என்று தெரிவித்துளளார்.

முழு கட்டுரையைப் படிக்க →