ஜம்மு: இந்திய கடற்படை வீரர் சாஹில் வர்மா, கடந்த பிப்ரவரி 27ஆம் தேதி பணியில் இருந்தபோது காணாமல் போன விவகாரத்தில், பிரதமர் மோடி தலையிட வேண்டும் என்றும் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
இந்திய கடற்படை கப்பலில் இருந்து, கடற்படை வீரர் ஒருவர் மாயாமானார் என்பதும், அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்பதும் அதிர்ச்சியளிப்பதாக ஜம்மு மாவட்டத்தில் வசிக்கும் தந்தை சுபாஷ் சந்தர் தெரிவித்துள்ளார்.
கப்பலில் இருக்கும் சிசிடிவி காட்சிகள் ஒன்றிலும், என் மகன் இருப்பது பதிவாகவில்லை என்றால், என் மகன் எங்கேதான் சென்றார் என்று அவர் கேள்வி எழுப்புகிறார்.
மேலும், இந்த விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலையிட வேண்டும் என்றும், தங்கள் மகன் பத்திரமாக திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். மேலும், இந்த விவகாரம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.