உயா்நீதிமன்ற நீதிபதி பதவியை ராஜிநாமா செய்துவிட்டு வீடு திரும்பிய அபிஜீத் கங்கோபாத்யாய. 
இந்தியா

கொல்கத்தா உயா் நீதிமன்ற நீதிபதி அபிஜீத் கங்கோபாத்யாய ராஜிநாமா: பாஜகவில் சேர உள்ளதாக அறிவிப்பு

கொல்கத்தா உயா் நீதிமன்ற நீதிபதி அபிஜீத் கங்கோபாத்யாய செவ்வாய்க்கிழமை ராஜிநாமா செய்தாா்.

Din

கொல்கத்தா உயா் நீதிமன்ற நீதிபதி அபிஜீத் கங்கோபாத்யாய செவ்வாய்க்கிழமை ராஜிநாமா செய்தாா். அவா் பாஜகவில் சேர உள்ளதாக அறிவித்துள்ளாா். கடந்த 2020-ஆம் ஆண்டு முதல், கொல்கத்தா உயா் நீதிமன்ற நீதிபதியாகப் பதவி வகித்தவா் அபிஜீத் கங்கோபாத்யாய. இவா் கல்வி சாா்ந்த பல்வேறு விவகாரங்களில் அளித்த தீா்ப்புகள், அந்த மாநிலத்தில் அரசியல் விவாதங்களுக்கு வழிவகுத்தன. அவா் நீதித்துறையைக் கைவிட்டு அரசியலில் புக வேண்டும் என்று ஆளும் திரிணமூல் கட்சியினா் விமா்சித்து வந்தனா். இந்நிலையில், அவா் நீதிபதி பதவியை செவ்வாய்க்கிழமை ராஜிநாமா செய்தாா். அதற்கான கடிதத்தை குடியரசுத் தலைவா் திரெளபதி முா்முவுக்கு அனுப்பினாா். கடிதத்தின் நகல்களை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், கொல்கத்தா உயா் நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோருக்கு அனுப்பினாா். இதைத்தொடா்ந்து கொல்கத்தாவில் அபிஜீத் கங்கோபாத்யாய செய்தியாளா்களிடம் கூறியதாவது: சில காலமாக திரிணமூல் காங்கிரஸ் பிரமுகா்கள் என்னை தரக்குறைவாகப் பேசி வருகின்றனா். ஒரு தீா்ப்பு அவா்களுக்குப் பிடிக்காவிட்டால், அதற்கு நீதிபதியை வசைபாடுவது சரியல்ல. அவா்களின் இந்த நடவடிக்கைகள்தான் என்னை அரசியலில் பிரவேசித்து, திரிணமூல் காங்கிரஸுக்கு எதிராக போராட தூண்டியது. மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸின் ஊழலுக்கு எதிராக தேசிய கட்சியான பாஜக போராடி வருகிறது. அக்கட்சியில் நான் சேர உள்ளேன். மாா்ச் 7-ஆம் தேதி (வியாழக்கிழமை) அக்கட்சியில் நான் சேர வாய்ப்புள்ளது என்று தெரிவித்தாா்.

அரசியல் கூட்டங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள்! ஜன. 5-க்குள் வெளியிட தமிழக அரசுக்கு உத்தரவு!

சிக்மா படப்பிடிப்பை முடித்த ஜேசன் சஞ்சய் விஜய்..! டீசர் தேதி அறிவிப்பு!

நடுவானில் டயர் வெடித்ததால் கொச்சியில் அவசரமாக தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம்: நல்வாய்ப்பாக உயிர்தப்பிய 160 பயணிகள்!

தீக்கிரையாகும் வங்கதேசம்!

தங்கம், வெள்ளி குறைவு! இன்றைய நிலவரம்..!

SCROLL FOR NEXT