கோப்புப்படம்
இந்தியா

பாகிஸ்தான் கடாஸ் ராஜ் கோயிலில் மகாசிவராத்திரி விழா: இந்திய பக்தர்கள் புனிதப் பயணம்!

மகாசிவராத்திரியையொட்டி பாகிஸ்தானில் அமைந்துள்ள கடாஸ் ராஜ் கோயிலுக்கு இந்திய பக்தர்கள் புனிதப் பயணம் மேற்கொண்டுள்ளனர்.

DIN

மகாசிவராத்திரியையொட்டி பாகிஸ்தானில் அமைந்துள்ள கடாஸ் ராஜ் கோயிலுக்கு இந்திய பக்தர்கள் புனிதப் பயணம் மேற்கொண்டுள்ளனர்.

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் சக்வால் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கடாஸ் ராஜ் சிவன் கோயில் அமைந்துள்ளது. இத்திருக்கோயிலில் உள்ள தெப்பக்குளத்தில், சிவபெருமானின் கண்ணீர்த் துளிகள் மூலம் நீர் நிரம்பியதாக நம்பப்படுகிறது.

இந்நிலையில், கடாஸ் ராஜ் கோயிலுக்கு ஆண்டுதோறும் இந்தியாவிலிருந்து ஏராளமான பக்தர்கள் புனிதப் பயணம் மேற்கொள்வது வழக்கம். அதன்படி இந்தாண்டு மகாசிவராத்திரியை கொண்டாட ஏதுவாக, பக்தர்கள் வசதிக்காக பாகிஸ்தான் தூதரகம் 112 பேருக்கு விசாக்களை வழங்கியுள்ளது.

விசா வேண்டி 1000 பேர் வரை விண்ணப்பித்திருந்ததாகவும், ஆனால் அவர்களில் வெறும் 112 பேருக்கு மட்டுமே விசாக்கள் வழங்கப்பட்டிருப்பதால் பக்தர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

பஞ்சாபின் அமிர்தசரஸிலிருந்து சுமார் 100 பேர் அடங்கிய குழுவினர் இன்று(மார்ச் .6) பாகிஸ்தான் புறப்பட்டனர். இந்தியாவிலிருந்து செல்லும் பக்தர்கள் இம்மாதம் 12-ஆம் தேதி வரை பாகிஸ்தான் செல்ல அனுமதிக்கப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லியில் அடுத்தடுத்த 2 கட்டடங்களில் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு

தில்லியில் நச்சுப்புகை மூட்டத்தால் காற்று மாசுபாடு

தஞ்சாவூரில் 240 டன் குப்பைகள் சேகரிப்பு

பழவத்தான் கட்டளை வாய்க்கால் பகுதியில் நெல் பயிா் மூழ்கி சேதம்

மலபார் தீபாவளி... ஃபெமினா ஜார்ஜ்!

SCROLL FOR NEXT