முகப்பு
இந்தியா

தாயை இழந்த யானைக் குட்டியை தொடர்ந்து துரத்தும் துயரம்

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் தாயை இழந்த யானைக் குட்டியை தொடர்ந்து துரத்தும் துயரம்

Updated On : 8 மார்ச், 2024 at 7:07 AM
பகிர்:

கோவை: சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில், தாய் யானை இறந்தநிலையில், அதன் இரண்டு மாத யானைக் குட்டி, யானைக் கூட்டத்தோடு இணைக்கப்பட்ட நிலையில், அந்த கூட்டத்தால் யானைக் குட்டி புறக்கணிக்கப்பட்டு, வனத்துறையினரால் மீட்கப்பட்டுள்ளது.

வியாழக்கிழமை காலை, குட்டி யானை வனப்பகுதியில் தனியாக திரிவதைக் ட்ரோன் கேமரா மூலம் கண்டறிந்த வனத்துறையினர் உடனடியாக அதனை மீட்டனர். உடனடியாக ஹாசனூர் வனத்துறைக்கு உள்பட்ட முகாமுக்குக் கொண்டு செல்லப்பட்டு, இயற்கை சூழலில் வளர்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கால்நடை மருத்துவர்கள் குழுவைச் சேர்ந்த எஸ். சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தைச் சேர்ந்த சதாசிவம், ஆனைமலை புலிகள் காப்பகத்தைச் சேர்ந்த இ. விஜயராகவன், கோவை வனத்துறையைச் சேர்ந்த சுகுமார், முதுமலை புலிகள் காப்பகத்தைச் சேர்ந்த ராஜேஷ் குமார், களக்காடு முண்டந்துரை புலிகள் காப்பகத்தைச் ச்ரந்த கலைவாணன் உள்ளிட்டோர், இரண்டு மாத குட்டி யானையை 24 மணி நேரமும் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.

குட்டி யானை, மரத்தில் எல்லாம் கட்டிவைக்கப்படாது, இயற்கை சூழலில் அது வளர்க்கப்படும். லேக்டோஜன் மற்றும் இளநீர் போன்றவற்றை அவ்வப்போது கொடுத்து வருகிறோம், யானையின் உடலில் நீர்ச்சத்து குறைந்துவிடாமல் கவனிக்கப்பட்டு வருகிறது. தற்போது குட்டியானை நலமுடன் நன்றாக சுற்றி வருகிறது என்கிறார்கள் வனத்துறை அதிகாரிகள்.

தொடர்ந்து, வனத்துறை அதிகாரிகளிடன் கலந்தாலோசனை செய்து, தெப்பக்காடு யானைகள் முகாமுக்கு இந்த குட்டி யானையைக் கொண்டு செல்வது தொடர்பாக முடிவெடுக்கப்படும் என்றும், இவ்வாறு தனித்து விடப்படும் யானைக் குட்டிகளை பராமரிப்பதில் அங்கிருக்கும் பழங்குடியினர் நிபுணத்துவம் பெற்றவர்கள் என்று தெரிவிக்கிறார்கள்.

முழு கட்டுரையைப் படிக்க →