இந்தியா

தில்லியில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தை! தொடரும் மீட்புப் பணி!

DIN

தில்லியின் கேஷப்பூர் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை ஆழ்துளைக் கிணற்றுக்குள் குழந்தை தவறி விழுந்ததாக காவல் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கேஷப்பூர் மண்டி பகுதியில் உள்ள தில்லி ஜல் போர்டு நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் சுமார் 40-50 அடி ஆழமுள்ள ஆழ்துளைக் கிணற்றுக்குள் குழந்தை தவறி விழுந்தது.

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த தில்லி தீயணைப்பு வீரர்கள், தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் தில்லி காவல்துறையினர் குழந்தையை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

காவல் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "ஆழ்துளைக் கிணற்றில் குழந்தை விழுந்த இடத்துக்கு இணையாக மற்றொரு பள்ளத்தைத் தோண்டி மீட்புப் பணியை தொடர்வோம்" என்று தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விமானிகள் பற்றாக்குறை... ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் சேவை குறைப்பு

தென் சென்னை வாக்கு எண்ணும் மையத்தில் சிசிடிவி பழுது!

அடுத்த 2 மணிநேரத்துக்கு 7 மாவட்டங்களில் மழை பெய்யும்!

‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் பெரியாா் பல்கலை. மாணவா்கள் இங்கிலாந்து பயணம்

அரசுப் பள்ளியிலும், தாய்மொழியிலும் படித்துதான் சாதித்தோம் -ஆட்சியா், காவல் ஆணையா், மாநகராட்சி ஆணையா் பேச்சு

SCROLL FOR NEXT