இந்தியா

ஒடிசா: புலிகள் காப்பகத்தில் ரூ.10 கோடி மதிப்பிலான கசகசா செடிகள் அழிப்பு

DIN

ஒடிசாவில் சிமிலிபால் புலிகள் காப்பகத்தில் ரூ.10 கோடி மதிப்பிலான கசகசா செடிகளை அழித்துள்ளதாக அதிகாரி ஒருவர் திங்கள்கிழமை தெரிவித்தார்.

ஒடிசா மாநிலம், மயூர்பஞ்ச் மாவட்டத்தில் உள்ள சிமிலிபால் புலிகள் காப்பகம் உள்ளது. இங்கு பாதுகாக்கப்பட்ட பகுதிக்குள் போதைப்பொருளாக பயன்படும் கசகசா செடிகள் பயிரிடப்பட்டிருப்பதாக காவல்துறையினருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது.

உடனே அங்கு விரைந்த காவல்துறையினர் 15 க்கும் மேற்பட்ட கசகசா தோட்டங்களை அழித்தனர்.

இதன் மதிப்பு ரூ.10 கோடி இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. மேலும் இதுதொடர்பாக மயூர்பஞ்ச் காவல்துறையினர் ஜாஷிபுர் காவல் நிலையத்தில் இரண்டு வழக்குகளை பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முன்னதாக இந்த ஆண்டு பிப்ரவரியில், புலிகள் காப்பகத்திற்குள் இருந்த ரூ.26 லட்சம் மதிப்பிலான கசகசா செடிகளை மயூர்பஞ்ச் காவல்துறையினர் அழித்ததாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நம்பிக்கையின் வானவில்...!

திட்டக்குடி அருகே கார் டயர் வெடித்து கார் விபத்து: 3 பேர் பலி

அமித் ஷாவை பிரதமராக்கவே மோடி பிரசாரம்: கேஜரிவால் பேச்சு

வாக்குகளை அள்ளிய காங். வறுமையை ஒழிக்கவில்லை: நயாப் சைனி

அகிலேஷ் யாதவால் இந்தியா - பாக். போட்டியாக மாறிய கன்னௌஜ்!

SCROLL FOR NEXT