இந்தியா

ஹரியாணா முதல்வராக பதவியேற்றார் நயாப் சைனி!

ஹரியாணா ஆளுநர் பண்டாரு தத்தாத்ராயா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

DIN

ஹரியாணா மாநில முதல்வர் மனோகர் கட்டர் இன்று காலை ராஜிநாமா செய்த நிலையில், அம்மாநில பாஜக தலைவரும், எம்பியுமான நயாப் சிங் சைனி புதிய முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

மக்களவைத் தேர்தலில் மனோகர் லால் கட்டரை கர்னல் தொகுதியில் களமிறக்க பாஜக தலைமை திட்டமிட்டுள்ளது.

பாரதிய ஜனதா கட்சி - ஜனநாயக ஜனதா் கட்சி கூட்டணி முறிந்ததைத் தொடர்ந்து ஹரியாணா முதல்வர் மனோகர் லால் கட்டர் மற்றும் அவரது அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர்கள் அனைவரும் செவ்வாய்க்கிழமை காலை தங்களது பதவியை ராஜிநாமா செய்தனர்.

கூட்டணி முறிவு மற்றும் மனோகர் லால் கட்டர் மக்களவைத் தேர்தலில் போட்டியிட திட்டம் என்ற செய்திகள் நேற்று முதலே வெளியாகிவந்த நிலையில், மனோகர் லால் கட்டர் மற்றும் அவரது அமைச்சர்கள் இன்று மாநில ஆளுநரிடம் தங்களது ராஜிநாமா கடிதத்தை அளித்தனர்.

ஹரியாணாவில் ஆட்சி அமைக்க 46 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவைப்படும் நிலையில், பாஜகவிடம் 41 எம்எல்ஏக்கள் மட்டுமே இருப்பதால், 7 சுயேச்சை எம்எல்ஏக்களின் ஆதரவை பாஜக கோரியது.

இதனைத் தொடர்ந்து பாஜக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் 7 சுயேச்சைகளும் பங்கேற்ற நிலையில், புதிய முதல்வராக பாஜகவின் மாநிலத் தலைவர் நயாப் சிங் சைனியை தேர்வு செய்யப்பட்டார்.

இந்த நிலையில், ஹரியாணா ஆளுநர் மாளிகையில் மாநிலத்தின் புதிய முதல்வராக சைனி பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

இந்த நிகழ்வில் மனோகர் கட்டார், பாஜக எம்எல்ஏக்கள் கலந்து கொண்டனர். கூட்டணியை முறித்த ஜனநாயக ஜனதா் கட்சியின் 4 எம்எல்ஏக்களும் பங்கேற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஹரியாணாவில் வாக்குத் திருட்டு ஆதாரமற்றது, நாட்டை அவமதிக்கும் முயற்சி: பாஜக

வாக்குச்சாவடி முகவர்கள் எதிர்க்காதது ஏன்? ராகுலுக்கு தேர்தல் ஆணையம் கேள்வி

போவோமா ஊர்கோலம்... அஹானா கிருஷ்ணா!

மரகதப் பறவை... பிரணிதா சுபாஷ்!

உனக்காக என் மனைவியைக் கொன்றேன்! பல பெண்களுக்கு அனுப்பிய பெங்களூரு டாக்டர்!!

SCROLL FOR NEXT