கோப்புப் படம்
கோப்புப் படம் 
இந்தியா

பங்குச்சந்தை உயர்வு! 22 நிறுவனங்களின் பங்குகள் வீழ்ச்சி!!

DIN

வாரத்தின் இரண்டாவது வணிக நாளான இன்று (மார்ச் 12) இந்திய பங்குச்சந்தை வணிகம் உயர்வுடன் முடிந்தன. நேற்று சரிவுடன் முடிந்திருந்த நிலையில், சென்செக்ஸ், நிஃப்டி இன்று உயர்வுடன் காணப்படுகின்றன.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 165.32 புள்ளிகள் உயர்ந்து 73,667.96 புள்ளிகளாக வர்த்தகம் நிறைவடைந்தது. மொத்த வர்த்தகத்தில் இது 0.22 சதவிகிதம் உயர்வாகும்.

இதேபோன்று தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 3.05 புள்ளிகள்உயர்ந்து 22,335.70 புள்ளிகளாக வர்த்தகம் நிறைவு பெற்றது. மொத்த வர்த்தகத்தில் இது 0.014 சதவிகிதம் உயர்வாகும்.

எச்.டி.எஃப்.சி., டிசிஎஸ், இன்ஃபோசிஸ், மாருதி சுசூகி, ரிலையன்ஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் நேர்மறையாக இருந்தன. எஸ்பிஐ, ஐடிசி, ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல், என்டிபிசி ஆகிய நிறுவனங்களின் பங்குகள் பெரும் சரிவை சந்தித்தன.

சென்செக்ஸ் பட்டியலிலுள்ள முதல் 30 தரப் பங்குகளில் 8 நிறுவனங்களின் பங்குகள் உயர்வுடன் முடிவடைந்தன. எஞ்சிய 22 நிறுவனங்களின் பங்குகள் சரிவை சந்தித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பள்ளிகளுக்கு சீருடைகள் தைக்கும் பணி வழங்கக் கோரி மனு

பாரதியாா் பல்கலை.யில் எம்.எஸ்சி. செயற்கை நுண்ணறிவு படிப்புக்கு மாணவா் சோ்க்கை

அரவக்குறிச்சி பகுதிகளில் குழாய்கள் உடைந்து குடிநீா் வீணாவதாகப் புகாா்

மத்தியப் பல்கலைக்கழகத்தில் நுழைவுத் தோ்வு இல்லா படிப்புகள்

‘சத்தான உணவு முறையே காரணம்’ பளுதூக்கும் போட்டியில் சிறப்பிடம் பெற்ற 82 வயது மூதாட்டி!

SCROLL FOR NEXT