கோப்புப் படம் 
இந்தியா

தேர்தல் பத்திர நன்கொடை: பாஜக ரூ. 6,986 கோடி! காங்கிரஸ் ரூ. 1,334 கோடி

பாஜகவுக்கு அடுத்தபடியாக திரிணமூல் காங்கிரஸ் கட்சி ரூ. 1,397 கோடி நன்கொடை பெற்றுள்ளது

DIN

தேர்தல் பத்திரங்கள் மூலம் பாரதிய ஜனதா கட்சி ரூ. 6,986 கோடி நன்கொடையாகப் பெற்றுள்ளது. தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் பெற்ற நன்கொடை பட்டியலில் பாஜக முதலிடத்தில் உள்ளது.

தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் பெற்ற நன்கொடை விவரங்களை இந்திய தேர்தல் ஆணையம் இணையதள பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக இன்று (மார்ச் 17) வெளியிட்டுள்ளது.

இதில், பாஜக அதிக நன்கொடையைப் பெற்றுள்ளது. கடந்த 2018-19 ஆம் நிதி ஆண்டில் பாஜகவுக்கு ரூ.1,451 கோடி நன்கொடையாகக் கிடைத்துள்ளது.

BJP Electrol bond fund details.pdf
Preview

2019-20ம் ஆண்டில் ரூ. 2,555 கோடி ரூபாயை தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜக நன்கொடையாகப் பெற்றுள்ளது. இது ஒரே ஆண்டில் பாஜக பெற்ற அதிகபட்சத் தொகையாகும். இது ஓராண்டில் மற்ற கட்சிகள் பெற்ற தொகையை காட்டிலும் மிக அதிகம்.

2021-21 நிதி ஆண்டில் ரூ. 22.38 கோடியும், 2021-22ம் ஆண்டில் ரூ.1,033 கோடியும், 2022-23ஆம் ஆண்டில் ரூ.1,294 கோடியும் பாஜக பெற்றுள்ளது. இதேபோன்று 2023-24 நிதி ஆண்டில் பாஜக ரூ. 421 கோடியை நன்கொடையாகப் பெற்றுள்ளது.

பாஜகவுக்கு அடுத்தபடியாக (இரண்டாவது இடத்தில்) திரிணமூல் காங்கிரஸ் கட்சி ரூ. 1,397 கோடி நன்கொடையாகப் பெற்றுள்ளது.

ADMK Electrol Bond fund details.pdf
Preview

மூன்றாவது இடத்தில் காங்கிரஸ் கட்சி உள்ளது. இக்கட்சி ரூ.1,334 கோடியை தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடையாகப் பெற்றுள்ளது.

நான்காவதாக பாரதிய ராஷ்டிர சமிதி கட்சி ரூ. 1,322 கோடி நன்கொடை பெற்றுள்ளது. ஐந்தாவது இடத்தில் ரூ. 944.50 கோடி நன்கொடையுடன் பிஜு ஜனதா தளம் உள்ளது.

இதேபோன்று தேர்தல் பத்திரங்கள் மூலம் திமுக ரூ. 509 கோடி நன்கொடை பெற்றுள்ளது. (இதில் ரூ.509 கோடியை லாட்டரி மார்ட்டினின் ஃபியூச்சர் கேமிங் நிறுவனம் கொடுத்துள்ளது. )

அதிமுக ரூ. 6 கோடி பெற்றுள்ளது. (சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் மட்டும் ரூ.5 கோடி வழங்கியுள்ளது.)

ஆந்திர மாநிலத்தின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி ரூ. 442.80 கோடி நன்கொடையாகப் பெற்றுள்ளது.

சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி உள்ளது. இக்கட்சி ரூ. 181.35 கோடி நிதியாகப் பெற்றுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திடீரென வைரலான சோனியா பாடல்! என்ன காரணம்?

தவெக மாநாட்டில் தொண்டர்கள் மயக்கம்!

தாக்குதல் எதிரொலி: தில்லி முதல்வருக்கு இஸட் பிரிவு பாதுகாப்பு!

மாநாட்டுத் திடலில் குவிய ஆரம்பித்த தவெக தொண்டர்கள்! கழுகுப்பார்வை காட்சிகள்! | Vijay | Madurai

"நீ அரியணை ஏறும் நாள் வரும்": ஷோபா சந்திரசேகர் வாழ்த்து!

SCROLL FOR NEXT