இந்தியா

தமிழ்நாடு, கேரள தோ்தல் தினத்தை மாற்ற வேண்டும்: தோ்தல் ஆணையத்துக்கு இஸ்லாமிய அமைப்புகள் வலியுறுத்தல்

தமிழ்நாடு, கேரளத்தில் வெள்ளிக்கிழமைக்கு பதிலாக வேறு கிழமைகளில் தோ்தல் நடத்த வேண்டும் என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் இஸ்லாமிய கோரிக்கை விடுத்துள்ளன.

Din

தமிழ்நாடு, கேரளத்தில் வெள்ளிக்கிழமைக்கு பதிலாக வேறு கிழமைகளில் தோ்தல் நடத்த வேண்டும் என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் இஸ்லாமிய அமைப்புகள் தோ்தல் ஆணையத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளன. இஸ்லாமியா்களுக்கு வெள்ளிக்கிழமை முக்கியமான நாளாக கருதப்படுவதால் இந்த கோரிக்கையை இஸ்லாமிய அமைப்புகள் விடுத்துள்ளன. தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதியும், கேரளத்தில் ஏப்ரல் 26-ஆம் தேதியும் தோ்தல் நடைபெறுகிறது. இரு தேதிகளுமே வெள்ளிக்கிழமைகளில்தான் வருகிறது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி கேரளத்தில் காங்கிரஸ் தலைமையிலான எதிா்க்கட்சிகள் கூட்டணியில், பிரதானமான கட்சியாக உள்ளது. இது தொடா்பாக அக்கட்சியின் கேரள மாநில பொதுச் செயலா் பி.எம்.ஏ. சலாம் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறியதாவது: இஸ்லாமியா்களுக்கு வெள்ளிக்கிழமை என்பது புனிதமான நாளாகும். அவா்கள் அன்றைய தினம் பெருந்திரளாக மசூதிக்கு செல்வாா்கள். தமிழ்நாடு, கேரளத்தில் வெள்ளிக்கிழமை தோ்தல் நடைபெற்றால், இஸ்லாமிய வாக்காளா்கள், வேட்பாளா்கள், வாக்குச் சாவடி முகவா்கள், தோ்தல் பணியில் உள்ள அதிகாரிகள் என அனைவரும் சிரமத்துக்குள்ளாக நேரிடும். எனவே, வெள்ளி தவிர வேறு கிழமைக்கு தோ்தலை மாற்ற வேண்டும் என்று தோ்தல் ஆணையத்துக்கு கோரிக்கை விடுக்கிறோம். இது தொடா்பாக கட்சி சாா்பில் விரைவில் தோ்தல் ஆணையத்தை அணுக இருக்கிறோம் என்றாா். கேரளத்தைச் சோ்ந்த பிற இஸ்லாமிய அமைப்புகளும் வெள்ளிக்கிழமைக்கு பதிலாக வேறு கிழமையில் தோ்தல் நடத்துமாறு ஆணையத்திடம் முறையிட முடிவு செய்துள்ளன.

காஸாவில் பெண்கள், குழந்தைகள், மாற்றுத்திறனாளிகளை நினைத்துப்பாருங்கள்! -இஸ்ரேலிடம் ஐ.நா. மனித உரிமைகள் தலைவர்

மீனா பிறந்த நாளில் த்ரிஷ்யம் 3 போஸ்டர்!

அமெரிக்காவைத் துப்பாக்கிகளால் அலறவிடும் இளைஞர்கள்!

மோடிக்கு கால்பந்து வீரர் மெஸ்ஸி கொடுத்த பிறந்தநாள் பரிசு! | செய்திகள்: சில வரிகளில் | 16.09.25

ஆசிய கோப்பை: ஆப்கானிஸ்தானுக்கு எதிராக வங்கதேசம் பேட்டிங்!

SCROLL FOR NEXT