இந்தியா

மதுவிருந்தில் பாம்பு விஷம் பயன்படுத்திய வழக்கு: கைதான யூடியூபருக்கு 15 நாள் காவல்

DIN

பாம்பு விஷம் தொடர்பான வழக்கில் கைதான யூடியூபர் மற்றும் பிக் பாஸ் வெற்றியாளர் எல்விஷ் யாதவிற்கு 15 நாள் நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம், நொய்டாவில் ரேவ் பார்ட்டி எனப்படும் மது விருந்துகளை நடத்தியதாகவும், அதில் பாம்பு விஷம் மற்றும் சட்டவிரோதமான போதைப் பொருட்களை வழங்கியதாகவும் எல்விஷ் யாதவ் மீது புகார் எடுந்தது.

மேலும் இதுதொடர்பாக எல்விஷ் யாதவ் உள்ளிட்ட 6 பேர் மீது நொய்டா செக்டார் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் ஐந்து பேர் கடந்த நவம்பர் 3ஆம் தேதி கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளியே வந்தனர்.

இதற்கிடையில், ரேவ் பார்ட்டியில் பாம்பு விஷம் சப்ளை செய்யப்பட்டதில் தனக்கு தொடர்பு இல்லை என்று எல்விஷ் மறுப்பு தெரிவித்தார்.

தனக்கு எதிரான குற்றச்சாட்டுகளை மறுத்து, நவம்பர் 4-ஆம் தேதி விடியோ ஒன்றையும் வெளியிட்டார். இவ்வழக்கில் எல்விஷ் யாதவ்வை ஞாயிற்றுக்கிழமை நெய்டா காவல்துறையினர் கைது செய்தனர். தொடர்ந்து அவர் உள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

அவரை 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஷபானாவின் போலீஸ் போலீஸ் இணையத் தொடரின் வெளியீட்டுத் தேதி!

டிஜிட்டல் அரெஸ்ட்: ரூ. 80 லட்சத்தை இழந்த முதியவர்! இளைஞர் கைது!!

பெரியார் பிறந்த நாள்: தவெக தலைவர் விஜய் மரியாதை!

என் தொழிலைக் கெடுக்காதீங்க... ஆவேசமான விடிவி கணேஷ்!

பெரியார் பிறந்தநாள்! முதல்வர் ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்டோர் மரியாதை!

SCROLL FOR NEXT