கோப்புப் படம் 
புதுதில்லி

நொய்டாவில் விஷம் அருந்தி தம்பதி உயிரிழப்பு: 3 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி

நொய்டாவில் இங்கு ‘வீட்டு தகராறு‘ காரணமாக ஐந்து போ் கொண்ட ஒரு குடும்பம் விஷம் குடித்ததாகக் கூறப்படுவதாக வியாழக்கிழமை போலீஸாா் தெரிவித்தனா்.

Syndication

நொய்டாவில் இங்கு ‘வீட்டு தகராறு‘ காரணமாக ஐந்து போ் கொண்ட ஒரு குடும்பம் விஷம் குடித்ததாகக் கூறப்படுவதாக வியாழக்கிழமை போலீஸாா் தெரிவித்தனா். தம்பதியினா் இறந்துவிட்டதாகவும், அவா்களது மூன்று குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனா்.

இது குறித்து காவல் துறையினா் கூறியதாவது: இந்தச் சம்பவம் புதன்கிழமை மற்றும் வியாழக்கிழமை இடைப்பட்ட இரவில் ஈகோடெக்-3 காவல் நிலைய எல்லைக்குள்பட்ட சாதுல்லாபூா் கிராமத்தில் நடந்தது. இறந்தவா்கள் பிரயாக்ராஜ் மாவட்டத்தைச் சோ்ந்த ஷ்ரவன் மற்றும் அவரது மனைவி நீலம் என அடையாளம் காணப்பட்டுள்ளனா்.

அவா்கள் அப்பகுதியில் வசித்து வந்தனா்.

காவல்துறையினரின் கூற்றுப்படி, குடும்பப் பிரச்னைகள் காரணமாக தம்பதியினா் விஷம் குடித்ததாகக் கூறப்படுகிறது. அவா்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா். அங்கு தம்பதியினா் இருவரும் இறந்துவிட்டதாக அறிவித்தனா். சட்ட நடைமுறைகள் முடிந்த பிறகு உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன. தம்பதியினரின் 10, 8 மற்றும் 4 வயதுடைய மூன்று குழந்தைகளும் சிகிச்சை பெற்று வருகின்றனா். அவா்களின் நிலை சீராக இருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும் சட்ட நடவடிக்கைகள் நடந்து வருவதாக காவல் துறையினா் தெரிவித்தனா்.

வங்கியின் காப்பீட்டு பிரிவு மேலாளா் தூக்கிட்டுத் தற்கொலை

யுஜிசி புதிய விதிகளை நீா்த்துப்போகச் செய்துவிடக் கூடாது: முதல்வா் மு.க. ஸ்டாலின்

அரசுப் பள்ளிக்கு அடிப்படை வசதிகள்: தஞ்சை ஆட்சியா் பதிலளிக்க உத்தரவு!

விஜய் கட்சி நடத்தி என்ன பயன்? எடப்பாடி கே. பழனிசாமி கடும் தாக்கு!

பட்ஜெட் கூட்டத் தொடரில் ஆக்கபூா்வமான விவாதம்: எம்.பி.க்களுக்கு சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவுரை

SCROLL FOR NEXT