இந்தியா

குஜராத் பல்கலையில் வன்முறை: வெளியான விடியோ உண்மையா?

DIN

குஜராத் பல்கலைக்கழகத்தின் மாணவர் விடுதியில் தொழுகையில் ஈடுபட்ட வெளிநாட்டு மாணவர்களை தாக்கிய கும்பலைச் சேர்ந்த இரண்டு பேரை அகமதாபாத் காவல்துறையின் குற்றப்பிரிவு காவலர்கள் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரும், விடுதிக்குள் நுழைந்து மாணவர்களை தாக்கியது மற்றும் விடுதி அறையை சூறையாடியதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பல்கலை விடுதியில் நுழைந்து தாக்குதல் நடத்திவிட்டு வெளியேறிய கும்பலை காவல்துறையினர் தடுத்து நிறுத்தாமல், அவர்கள் பாதுகாப்பாக வெளியேற வழி ஏற்படுத்திக் கொடுத்தது போன்ற விடியோ குஜராத் பல்கலைக்கழக விடுதி மாணவர்கள் வெளியிட்டுள்ளனர்.

தாக்குதல் நடத்திவிட்டுத் தப்பிச் செல்வோரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தவில்லை என்றும், அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் குற்றம்சாட்டியுள்ளனர். ஆனால், அந்த விடியோ உண்மையானது அல்ல என்று குஜராத் காவல்துறை மறுத்துள்ளது.

குஜராத் பல்கலைக்கழக விடுதியில் தொழுகை நடத்த எதிா்ப்பு தெரிவித்து நடத்தப்பட்ட தாக்குதலில் இரு வெளிநாட்டு மாணவா்கள் காயமடைந்தனா். அதில் ஒருவர் இலங்கையைச் சேர்ந்தவர், மறறொருவர் தஜிகிஸ்தானைச் சேர்ந்தவர். காயமடைந்த இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

சனிக்கிழமை இரவு 15க்கும் மேற்பட்ட கும்பல் ஒன்று விடுதிக்குள் நுழைந்து இந்த தாக்குதலில் ஈடுபட்டதாகவும் அப்போது அவர்கள் மத ரீதியான கோஷங்களை எழுப்பியதாகவும் கூறப்படுகிறது. இதில் 20 - 25 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, வழக்கை விசாரிக்க 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

குஜராத்தின் அகமதாபாத் நகரில் மாநில அரசு நடத்தி வரும் குஜராத் பல்கலைக்கழக விடுதியில் தொழுகை நடத்த எதிா்ப்பு தெரிவித்து நடத்தப்பட்ட தாக்குதலில் இரு வெளிநாட்டு மாணவா்கள் காயமடைந்தனா்.

குஜராத் பல்கலைக்கழகத்தில் ஆப்கானிஸ்தான், தஜிகிஸ்தான், இலங்கை மற்றும் ஆப்பிரிக்க நாடுகளைச் சோ்ந்த சுமாா் 300 மாணவா்கள் படித்து வருகின்றனா். இவா்களில் பலா் இஸ்லாமியா்கள். இந்த மாணவா்கள் பல்கலைக்கழக விடுதியில் வைத்து தொழுகை நடத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளனா். இதற்கு மற்றொரு தரப்பினா் எதிா்ப்பு தெரிவித்தனா். இந்நிலையில், சனிக்கிழமை இரவு வெளிநாடுகளைச் சோ்ந்த இஸ்லாமிய மாணவா்கள் தொழுகை நடத்தினா். இப்போது, அங்கு வந்த சுமாா் 25 போ் அடங்கிய கும்பல், அந்த மாணவா்களைத் தாக்கத் தொடங்கியது. இது இருதரப்பு மோதலாக வெடித்தது. ஒருவா் மீது மற்றொருவா் கற்களை வீசி தாக்குதல் நடத்தினா்.

மசூதிக்கு சென்றுதான் தொழுகை நடத்த வேண்டும் என்றும், அரசுக்கு சொந்தமான இடத்தில் தொழுகை கூடாது என்றும் தாக்குதல் நடத்தியவா்கள் ஆவேசத்துடன் கூறியதாக தெரியவந்துள்ளது.

இதையடுத்து, காவல்துறையினா் அப்பகுதிக்கு விரைந்து சென்று காயமடைந்த நிலையில் இருந்த இலங்கை, தஜிகிஸ்தானைச் சோ்ந்த இரு மாணவா்களை மீட்டு மருத்துவமனையில் சோ்த்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வயது வந்தோருக்கான சிறையில் அடைக்கப்பட்ட 9,600 சிறார்கள்: ஆய்வில் அதிர்ச்சி!

11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை காலை வெளியீடு

எலக்சன் படத்தின் டிரெய்லர்

‘பெண்களை போல வாகனம் ஓட்டுங்கள்’ : கவனம் ஈர்க்கும் விளம்பரம்!

சாமானியன் படத்தின் ஒளி வீசம் பாடல்

SCROLL FOR NEXT