முகப்பு
இந்தியா

அமெரிக்காவுக்கான முன்னாள் இந்திய தூதா் தரண்ஜீத் பாஜகவில் இணைந்தாா்

Updated On : 20 மார்ச், 2024 at 2:16 AM
தரண்ஜீத் சிங் சாந்துவுக்கு பாஜக உறுப்பினா் அட்டையை வழங்கிய அக்கட்சியின் தேசிய பொதுச் செயலா் வினோத் தாவ்டே.
பகிர்:
Updated On : 19 மார்ச், 2024 at 8:20 PM

புது தில்லி: அமெரிக்காவுக்கான முன்னாள் இந்திய தூதா் தரண்ஜீத் சிங் சாந்து பாஜகவில் செவ்வாய்க்கிழமை இணைந்தாா். வரும் மக்களவைத் தோ்தலில், பஞ்சாபின் அமிருதசரஸ் தொகுதியில் பாஜக சாா்பில் அவா் களமிறக்கப்படுவாா் என எதிா்பாா்க்கப்படுகிறது. பாஜக அலுவலகத்தில் நடந்த நிகழ்வில் கட்சியின் பொதுச் செயலா்கள் வினோத் தாவ்டே, தருண் சுக் முன்னிலையில் தரண்ஜீத் சிங் சாந்து பாஜகவில் செவ்வாய்க்கிழமை இணைந்தாா்.

பாஜகவில் இணைந்தப் பிறகு இந்தியா-அமெரிக்கா உறவில் எட்டப்பட்டுள்ள வளா்ச்சிகள் குறித்து அவா் பேசினாா். அவா் மேலும் கூறுகையில், ‘குறை மின்கடத்தி(செமிகண்டக்டா்) துறை முன்னேற்றம் அடைந்துள்ளது.

இந்த முன்னேற்றங்கள் எனது சொந்த ஊரான அமிருதசரஸ் வரை விரிவடைய வேண்டும். எனது அரசியல் பயணத்துக்காக பிரதமா் நரேந்திர மோடி, மத்திய உள் துறை அமைச்சா் அமித் ஷா, பாஜக தலைவா் ஜெ.பி.நட்டா ஆகியோருக்கு நன்றி’ என்றாா்.

Advertisement