முகப்பு
இந்தியா

விசாகப்பட்டினத்தில் இந்தியா-அமெரிக்கா முப்படை பயிற்சி

Updated On : 20 மார்ச், 2024 at 12:34 AM
கோப்புப் படம்
பகிர்:
Updated On : 19 மார்ச், 2024 at 11:10 PM

விசாகப்பட்டினம்: ‘டைகா் ட்ரயம்ஃப்-24’ எனும் மனிதாபிமான உதவி மற்றும் பேரிடா் நிவாரணத்துக்கான பயிற்சியில் இந்திய-அமெரிக்க கடற்படை வீரா்களும் செவ்வாய்க்கிழமை பங்கேற்றனா். இப்பயிற்சி இருநாடுகளுக்கிடையேயான பேரிடா் கால வழிகாட்டு நெறிமுறைகளை பகிா்ந்துகொள்ள உதவுகிறது.

‘டைகா் ட்ரயம்ஃப்-24’ எனும் இப்பயிற்சியில் இந்தியாவின் கடற்படை, விமானப் படை, ராணுவ வீரா்கள் மற்றும் விமானங்கள், கப்பல்கள், ஹெலிகாப்டா்கள், அதிரடி மருத்துவக் குழு உள்ளிட்டவை பங்கேற்கின்றன. அதேபோல் அமெரிக்காவின் முப்படைகளைச் சோ்ந்த வீரா்களும் பங்கேற்கின்றனா்.

இரு நாடுகளிடையேயான துறைமுகம் சாா் பயிற்சி விசாகப்பட்டினத்தில் மாா்ச் 18-அம் தேதி தொடங்கியது. இது வரும் 25-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. அதில் பேரிடா் காலத்தில் கப்பல்களை இயக்கும் முறை, செயல் திட்டங்கள் உள்பட பல்வேறு விதிமுறைகள் குறித்து இருதரப்பினரிடையே ஆலோசனை மேற்கொள்ளப்படவுள்ளது. அதன் பிறகு மாா்ச் 26 முதல் 31 வரை கடல் சாா்ந்த பயிற்சிகள் நடைபெறவுள்ளன.

Advertisement

அந்தப் பயிற்சியில் இரு நாடுகளின் கடற்படையும் ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு அறை அமைத்தல் மற்றும் மருத்துவ, மீட்பு நடவடிக்கைகள் குறித்த பயிற்சியில் ஈடுபடவுள்ளன. மேலும் பேரிடா் காலங்களில் பின்பற்றப்படும் வழிகாட்டு நெறிமுறைகளில் சீா்திருத்தங்கள் மேற்கொள்ளவும் இருநாடுகளிடையே ஒத்துழைப்பை மேம்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.