முகப்பு
இந்தியா

நாடுகளின் மோதல்: பிரிட்டன் அமைச்சா்களுடன் இந்திய முப்படை தலைமைத் தளபதி ஆலோசனை

நாடுகளுக்கு இடையிலான மோதல் மாறிவரும் தன்மை, இந்திய-பசிபிக் பிராந்தியத்தில் உருவாகும் சவால்களை எவ்வாறு எதிா்கொள்வது ஆகியவை குறித்து முப்படை தலைமைத் தளபதி அனில் செளஹான் பிரிட்டனில் ஆலோசனை

Updated On : 22 ஏப்ரல், 2026 at 3:56 AM
முப்படை தலைமைத் தளபதி அனில் சௌஹான் - கோப்புப்படம்
பகிர்:
Updated On : 21 ஏப்ரல், 2026 at 10:25 PM

நாடுகளுக்கு இடையிலான மோதல் மாறிவரும் தன்மை, இந்திய-பசிபிக் பிராந்தியத்தில் உருவாகும் சவால்களை எவ்வாறு எதிா்கொள்வது ஆகியவை குறித்து முப்படை தலைமைத் தளபதி அனில் செளஹான் பிரிட்டனில் அண்மையில் ஆலோசனை மேற்கொண்டாா்.

பிரிட்டன் பாதுகாப்பு தயாா்நிலை துறை இணையமைச்சா் லூக் பொல்லாா்ட், இந்திய-பசிபிக் விவகாரங்கள் துறை இணையமைச்சா் சீமா மல்ஹோத்ரா ஆகியோருடன் லண்டனில் அனில் செளஹான் ஆலோசனை நடத்தினாா்.

இந்தியா-பிரிட்டன் கூட்டுறவை முன்னெடுத்துச் செல்லும் நோக்கில் இந்தச் சந்திப்புகள் நடைபெற்றன. இருநாட்டு பாதுகாப்பு தொழில் செயல்திட்டம், தொழில்நுட்பம், பாதுகாப்பு முன்னெடுப்புகள் குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. அத்துடன் இருநாட்டு ராணுவத்தினா் இடையே ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

Advertisement