முகப்பு
உலகம்

அமெரிக்க படையில் ஒருவர் கூட உயிர் பிழைக்க மாட்டார்! - ஈரானிய தலைமைத் தளபதி எச்சரிக்கை!

அமெரிக்காவின் படைகளில் ஒருவரும் உயிர் பிழைக்க மாட்டார்கள் என ஈரான் ராணுவத்தின் தலைமைத் தளபதி எச்சரிக்கை விடுத்துள்ளார்...

Updated On : 2 ஏப்ரல், 2026 at 10:56 AM
ஈரானின் ராணுவத் தலைமைத் தளபதி எச்சரிக்கை... (கோப்புப் படம்) - AP
பகிர்:

ஈரான் மீது படையெடுத்தால் அமெரிக்காவின் ராணுவப் படைகளில் உள்ள ஒருவரும் உயிர் பிழைக்க மாட்டார்கள் என ஈரான் ராணுவத்தின் தலைமைத் தளபதி மேஜர் ஜெனரல் அமிர் ஹடாமி தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதல்களுக்குப் பதிலடியாக வளைகுடா நாடுகளில் அமைந்துள்ள அவர்களின் முக்கிய கட்டமைப்புகள் மீது ஈரான் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன.

இத்துடன், சர்வதேச அளவில் எரிபொருள் விநியோகத்தின் முக்கிய பாதையான ஹோர்முஸ் நீரிணையை ஈரான் முடக்கியுள்ளதால், தாக்குதல்களை அதிகரிக்கப்போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், ஈரானின் மீது படையெடுத்தால் அமெரிக்காவின் படையிலுள்ள ஒருவர்கூட உயிர் பிழைக்க மாட்டார்கள் என ஈரான் ராணுவத்தின் தலைமைத் தளபதி மேஜர் ஜெனரல் அமிர் ஹடாமி வியாழக்கிழமை (ஏப். 2) அன்று அறிவித்துள்ளார்.

இது குறித்து, ஈரானின் அரசு தொலைக்காட்சியில் வெளியான செய்தியில் கூறப்பட்டதாவது:

“நமது நாட்டின் மீதிருந்து போரின் நிழல் அகற்றப்பட வேண்டும். அனைவருக்கும் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும். ஏனெனில், இடங்கள் பாதுகாப்பாகவும், மக்கள் பாதுகாப்பின்றி இருப்பதும் சாத்தியமற்றது” எனக் கூறியுள்ளார்.

முன்னதாக, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய படைகள் நடத்திய தாக்குதல்களில் கடந்த பிப். 28 அன்று ஈரானின் தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

summary

Major General Amir Hatami said not a single member of the U.S. armed forces would survive if they were to invade Iran.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.