எம்.எம்.ஹாசன் (கோப்புப் படம்)
எம்.எம்.ஹாசன் (கோப்புப் படம்) SM
இந்தியா

தேர்தல் தேதி மாற்றக் கோரிக்கை: என்ன காரணம்?

DIN

கேரள மாநில காங்கிரஸ் கமிட்டியின் பொறுப்பு தலைவர் எம்.எம்.ஹாசன், மாநிலத்தில் வாக்குப் பதிவு நடைபெறும் தேதியை வேறு தேதிக்கு மாற்றுமாறு தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்துள்ளார்.

கேரளத்தில் ஏப்ரல் 26-ம் தேதி வெள்ளிக்கிழமை மக்களவைத் தேர்தல் வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது.

இது குறித்து எம்.எம்.ஹாசன் “தேர்தல் நடைபெறும் வெள்ளிக்கிழமை குறிப்பிட்ட பிரிவினருக்கு வாக்கு செலுத்த வருவதில் சிரமம் இருப்பதைக் கவனத்தில்கொண்டு தேர்தல் தேதியை மாற்ற கேட்டுக்கொண்டுள்ளேன். கேரளத்தில் வெள்ளிக்கிழமையும் ஞாயிற்றுக்கிழமையும் மக்களுக்கு வாக்குப் பதிவிட சிரமமான நாள்கள். ஆகவே வேறு ஒரு நாளில் தேர்தல் தேதியை மாற்றுமாறு நாங்கள் வலியுறுத்தியுள்ளோம்” எனத் தெரிவித்தார்.

கேரள மாநிலத்தில் உள்ள 20 மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 26-ம் தேதியில் ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

4-ஆம் கட்ட தேர்தல்: மே.வங்கத்தில் அதிகபட்ச வாக்குப்பதிவு

ஒரு நாளில் 3 முறை உடை மாற்றுகிறார், விலையோ லட்சம், யார் வாங்கித் தருகிறார்கள்? ராகுல் கேள்வி!

விராட் கோலியை மீண்டும் ஆர்சிபியின் கேப்டனாக நியமிக்க வேண்டும்: முன்னாள் இந்திய வீரர்

சீர்திருத்தப் பள்ளிக்கு பதில் சிறையில் அடைக்கப்பட்ட 9,600 சிறார்கள்: ஆய்வில் அதிர்ச்சி!

ஆழ்கடலில் சாகசப் பயணம்

SCROLL FOR NEXT