முகப்பு
இந்தியா

மேடையில் கண்கலங்கிய பிரதமர் மோடி!

சேலம் பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கண் கலங்கி பேசினார்.

Updated On : 19 மார்ச், 2024 at 8:48 AM
பகிர்:

சேலத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றுள்ள பொதுக் கூட்டத்தில் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்றுள்ளனர்.

சேலத்தில் நடைபெற்றுவரும் பொதுக்கூட்ட மேடையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்து தமிழகத்தில் போட்டியிடும் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், அமமுக பொதுச் செயலர் டிடிவி தினகரன், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பாரிவேந்தர், ஏ.சி.சண்முகம், ஜான் பாண்டியன், சரத்குமார் உள்ளிட்ட தலைவர்கள் மோடியுடன் அமர்ந்துள்ளனர்.

இக்கூட்டத்தில் பாஜக கூட்டணி தலைவர்கள், மத்திய இணை அமைச்சர் எல். முருகன், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் முன்னதக பேசினார்.

தொடர்ந்து, இந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசும் போது, ஆடிட்டர் ரமேஷ் மரணம் குறித்து நா தழுதழுக்கப் பேசி கண் கலங்கினார்.

இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், "ஆடிட்டர் ரமேஷ் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் கொலை செய்யப்பட்டதை மறக்கவே முடியாது. பாஜகவிற்காக உழைத்தவர்களை படுகொலை செய்துவிட்டார்கள்." எனத் தெரிவித்தார்.

முழு கட்டுரையைப் படிக்க →