பாபா ராம்தேவ் நேரில் ஆஜராக உச்சநீதிமன்றம் உத்தரவு
பதஞ்சலி விளம்பரத்தில் தவறான தகவல்கள் வெளியிடுவதாக தொடரப்பட்ட வழக்கில் பாபா ராம்தேவ் நேரில் ஆஜராக உத்தரவு
பதஞ்சலி ஆயுர்வேத மருந்துகளுக்கான விளம்பரங்களில் தவறான தகவல்கள் வெளியிடுவது குறித்து உச்சநீதிமன்றம் அனுப்பிய நோட்டீஸுக்கு பதிலளிக்காததால், அந்நிறுவனத்தின் இணை நிறுவனர் பாபா ராம்தேவை நேரில் ஆஜராக உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
கடந்த மாதம் தொடரப்பட்ட வழக்கில் பதஞ்சலி விளம்பரங்களில் தவறான தகவல்களை வெளியிடக்கூடாது என்று எச்சரித்த உச்சநீதிமன்றம், பதிலளிக்க கோரி அந்நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது.
இந்நிலையில், உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஹிமா கோலி, அஹ்ஸானுத்தீன் அமானுல்லாஹ் அமர்வில் இன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது.
Advertisement
Advertisement
இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் அனுப்பிய நோட்டீஸுக்கு பதஞ்சலி நிறுவனம் பதிலளிக்காததை கண்டித்த நீதிபதிகள், அவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஏன் தொடரக்கூடாது என்று கேள்வி எழுப்பினர்.
தொடர்ந்து, வழக்கின் அடுத்த விசாரணையின்போது பதஞ்சலி இணை நிறுவனர் பாபா ராம்தேவ் மற்றும் நிர்வாக இயக்குநர் ஆச்சார்யா பாலகிருஷ்ணா ஆகியோர் நேரில் ஆஜராக உத்தரவிட்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.