பொருந்தா உணவு சாப்பிட்டதைக் கண்டித்த தந்தை: மகள் எடுத்த விபரீத முடிவு
பொருந்தா உணவுகளை சாப்பிடுவதைக் கண்டித்த பெற்றோருக்கு மகள் கொடுத்த அதிர்ச்சி..
மகாராஷ்டிரத்தின், நாக்பூரில் பொருந்தா உணவுகளை(ஜங் ஃபுட்) சாப்பிட்ட மகளைக் கண்டித்ததால் மனமுடைந்து மகள் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாக்பூரின் சிந்தி காலனி பகுதியில் வசிப்பவர் பூமிகா வினோத் தன்வானி(19). இவர் இளங்கலை படித்து வந்தார்.
பூமிகாவுக்கு தைராய்டு பிரச்னை இருந்துள்ளது. இந்த நிலையில், பொருந்தா உணவு(ஜங்க் ஃபுட்) சாப்பிடும் பழக்கமுள்ள அவரை தன் தந்தை சாப்பிடக்கூடாது எனக் கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த பூமிகா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இதையடுத்து, இன்று காலை பெற்றோர் அதிர்ச்சியடைந்த நிலையில் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் ஏற்கெனவே அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.