தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால்
தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் 
இந்தியா

அரவிந்த் கேஜரிவால் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!

இணையதள செய்திப்பிரிவு

தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தில்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் வழக்கில் கைது செய்யப்படுவதில் இருந்து பாதுகாப்பு கோரி தாக்கல் செய்த மனுவை, வியாழக்கிழமை தில்லி உயர் நீதிமன்றம் நிராகரித்தது.

12 அதிகாரிகள் கொண்ட அமலாக்கத்துறை குழு, தில்லியில் உள்ள அவரது இல்லத்தில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சோதனை உத்தரவு பெற்றிருப்பதாகவும் மதுபான ஊழல் வழக்கு தொடர்பாக தேடுதல் நடத்தப்படுவதாகவும் முதல்வரின் பணியாளர்களிடம் அமலாக்கத்துறை தெரிவித்ததாக கூறப்படுகிறது.

முன்னதாக 8 முறை சம்மன் அனுப்பப்பட்டு அவற்றை அரவிந்த் கேஜரிவால் நிராகரித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மோடியுடன் நேருக்கு நேர் விவாதம்: ராகுல் காந்தி சம்மதம்!

வயது முதிர்ந்த போதிலும்... எம்.எஸ்.தோனிக்காக சிஎஸ்கேவின் தரமான பதிவு!

7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

ஈடன் கார்டன்ஸில் மழை; போட்டி நடைபெறுமா?

தமிழ்நாட்டில் போதைப் பொருள் பழக்கம் அதிகரிப்பு? தலைமைச் செயலர் முக்கிய ஆலோசனை

SCROLL FOR NEXT