இந்தியா

காங்கிரஸில் இணைந்த 2 ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள்!

ஆந்திரம் மாநிலத்தில் வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு மீண்டும் வாய்ப்பு மறுக்கப்பட்டதால் ஆளும் கட்சியில் இருந்து விலகியுள்ளனர்.

DIN

அமராவதி: ஆந்திராவில் ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 2 எம்எல்ஏக்கள் ஆளுங்கட்சியில் இருந்து விலகி ஞாயிற்றுக்கிழமை ஒய். எஸ். ஷர்மிளா ரெட்டி முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.

ஆந்திரம் மாநிலத்தில் வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு மீண்டும் வாய்ப்பு மறுக்கப்பட்டதால் ஆளும் கட்சியில் இருந்து விலகியுள்ளனர்.

ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சிந்தல்புடி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் வுன்னமட்லா எலிசா (63), கூடூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர்

வரபிரசாத் ராவ் (70) ஆகியி இருவரும் ஆந்திரம் மாநில காங்கிரஸ் தலைவர் ஒய்.எஸ்.ஷர்மிளா ரெட்டி முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

இது முதல்வர் ஜெகன் மோகன் ரொட்டி கட்சியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதே நேரத்தில் 2019 இல் சட்டப்பேரவைத் தேர்தலில் கூடூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வரபிரசாத் ராவ், ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான கட்சியில் இருந்து விலகி தில்லியில் பாஜகவில் இணைந்தவருக்கு பேரவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதையடுத்து பாஜவில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார்.

ஆந்திராவில் 175 பேரவைத் தொகுதி மற்றும் 25 மக்களவைத் தொகுதிகளுக்கு மே 13 ஆம் தேதி வாக்குப்பதிவும், ஜூன் 4 ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிறுவன் ஓட்டிவந்த கார்! நல்வாய்ப்பாக உயிர்தப்பிய 3 வயது குழந்தை!

வயநாட்டில் மகாத்மா காந்தி சிலை! திறந்துவைத்தார் பிரியங்கா காந்தி

தமிழகத்தின் 35-வது கிராண்ட் மாஸ்டர் இளம்பரிதிக்கு முதல்வர் வாழ்த்து!

கரப்பான் பூச்சி எக்ஸ்பிரஸ்!

சிபிஎஸ்இ 10, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு: பிப். 17ல் தொடக்கம்!

SCROLL FOR NEXT