இந்தியா

முகப்புப் படத்தை மாற்றி பிரசாரம்... ஆம் ஆத்மியின் புதிய யுக்தி

DIN

சமூக வலைதளப் பக்கங்களில் முகப்பு படத்தை மாற்றி தில்லி ஆம் ஆத்மி கட்சி பிரசாரத்தைத் தொடங்கியுள்ளது.

தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து இந்த பிரசாரத்தை ஆம் ஆத்மி முன்னெடுத்துள்ளது.

மக்களவைத் தேர்தலையொட்டி அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றன.

இதனிடையே தில்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் மார்ச் 21ஆம் தேதி தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலை அமலாக்கத் துறையினர் கைது செய்தனர். தற்போது அவர் விசாரணைக் காவலில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இது தொடர்பாக பேசிய ஆம் ஆத்மி கட்சியின் அமைச்சர் அதிஷி மார்லினா, தேர்தல் நெருங்கும் நேரத்தில் பாஜகவினரால் அரவிந்த் கேஜரிவால் கைது செய்யப்பட்டுள்ளார். நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் அரவிந்த் கேஜரிவாலின் உத்வேக நிலை சென்று சேர்வதை உறுதி செய்ய வேண்டும்.

இதற்காக சமூக வலைதளப் பக்கங்களில் முகப்புப் படத்தை மாற்றும் பிரசாரத்தை தொடங்கியுள்ளோம். கட்சியின் தலைவர்கள், எம்.எல்.ஏ.க்கள், தொண்டர்கள் என பலரும் தங்களது சமூக வலைதளப் பக்கங்களின் முகப்பு படங்களை மாற்ற வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். மேலும், இதற்கான பொதுவான படத்தையும் (காமன் டிபி ) வெளியிட்டார். அதில், சிறைக்கம்பிகளுக்கு பின்னால் அரவிந்த் கேஜரிவால் நிற்பதைப் போன்று உள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எல்லை தாண்டியதாக இலங்கை மீனவா்கள் 14 போ் கைது

கோடை வெயில் படுத்தும்பாடு..!

கருங்கல் துண்டத்துவிளை புனித அந்தோணியாா் ஆலய திருவிழா: இன்று தொடக்கம்

டெங்கு விழிப்புணா்வு தினம் கடைப்பிடிப்பு

மழை விளையாடியது: பிளே-ஆஃபில் ஹைதராபாத்

SCROLL FOR NEXT