முகப்பு
இந்தியா

அமலாக்கத் துறை அலுவலகத்தில் கேஜரிவால் மனைவி!

விசாரணைக் காவலிலுள்ள தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலை சந்திக்க அவரின் மனைவி சுனிதா கேஜரிவால் அமலாக்கத் துறை அலுவலகத்திற்கு வருகைபுரிந்தார்.

Updated On : 25 மார்ச், 2024 at 4:08 PM
சுனிதா கேஜரிவால்
பகிர்:

விசாரணைக் காவலிலுள்ள தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலை சந்திக்க அவரின் மனைவி சுனிதா கேஜரிவால் அமலாக்கத் துறை அலுவலகத்திற்கு வருகைபுரிந்தார்.

சமீபத்தில் அரவிந்த் கேஜரிவால் எழுதிய கடிதம் குறித்து காணொளி வாயிலாக சுனிதா கேஜரிவால் உரையாற்றியிருந்தார்.

சிறையிலிருந்தவாறு முதல்வர் பொறுப்புகளை கவனித்து வரும் அரவிந்த் கேஜ்ரிவால், கடிதம் மூலம் அதிகாரிகளுக்கு துறை வாரியான உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார்.

இந்நிலையில், அரவிந்த் கேஜரிவாலை சந்திக்க அவரின் மனைவி சுனிதா, தில்லி அமலாக்கத் துறை அலுவலகத்துக்கு வருகைபுரிந்தார்.

தில்லி மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் மார்ச் 21ஆம் தேதி இரவு கைது செய்யப்பட்ட அரவிந்த் கேஜரிவாலை, மார்ச் 27ம் தேதி வரை அமலாக்கத் துறை காவலில் விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →