அரவிந்த் கேஜரிவாலின் ஜாமீன் மனு: தில்லி உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
தில்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கடந்த 21-ம் தேதி கைது செய்யப்பட்டார்.இந்த நிலையில், சிறையில் உள்ள தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுக்கு உடல்நிலை பாதிக்கபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே, அரவிந்த் கெஜ்ரிவாலின் ஜாமீன் மனுவை இன்று (மார்ச். 27) தில்லி உயர் நீதிமன்றம்விசாரித்தது. அமலாக்கத்துறையின் நடவடிக்கைகள் தனது அடிப்படை உரிமைகளை மீறியிருப்பதாக கேஜரிவால் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. தன் மீது குற்றம் இருப்பதாக அமலாக்கத்துறையால் நிரூபிக்க முடியவில்லை எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த மனு மீது அமலாக்கத்துறை 7 நாள்களில் பதிலளிக்க உத்தரவிட்டுள்ள தில்லி உயர்நீதிமன்றம், வழக்கு விசாரணையை ஏப்ரல் 3-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.