கேஜரிவாலின் மனைவி சுனிதா
கேஜரிவாலின் மனைவி சுனிதா 
இந்தியா

வாட்ஸ்ஆப் பிரசாரத்தைத் தொடங்கினார் சுனிதா கேஜரிவால்!

DIN

தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலின் மனைவி சுனிதா வாட்ஸ்ஆப் பிரசாரத்தைத் தொடங்கியுள்ளார்.

கலால் கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறை காவலில் உள்ள தனது கணவருக்கு ஆதரவளிக்குமாறு மக்களை சுனிதா வலியுறுத்தியுள்ளார்.

செய்தியாளர்களுடன் சந்திப்பில், தனது கணவர் நாட்டில் உள்ள ஊழல் மற்றும் சர்வாதிகார சக்திகளுக்கு சவால் விடுத்துள்ளதாகவும், மக்கள் தங்கள் ஆசீர்வாதங்கள், பிரார்த்தனைகள் மூலம் அவரை ஆதரிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

வாட்ஸ்ஆப் எண்ணை வெளியிட்ட அவர் - 8297324624 ஆம் ஆத்மியின் தேசிய ஒருங்கிணைப்பாளருக்கு மக்கள் அனுப்பும் ஆசீர்வாதங்கள், பிரார்த்தனைகள் அல்லது வேறெதேனும் செய்திகளையும் அனுப்பலாம். கட்சியினர் அவர்களுக்குத் தெரிவிப்பார்கள் என்று அவர் கூறினார்.

ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், தில்லி முதல்வருமான கேஜரிவால் தில்லி கலால் கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் கடந்த மார் 21-ம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு ஏப்ரல் 1-ம் தேதி வரை காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’மஞ்சள் காய்ச்சல்’ தடுப்பூசி கட்டாயம் -சுகாதாரத்துறை அறிவுறுத்தல்

ஒகேனக்கல் அருவிகளில் நீர்வரத்து அதிகரிப்பு!

பிளஸ் 1 தேர்ச்சியில் கோவை முதலிடம்: விழுப்புரம் கடைசி!

பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது!

பிளஸ் 1 முடிவு: எந்தெந்த பாடத்தில் எத்தனை பேர் சதம்?

SCROLL FOR NEXT